அந்த அணியின் தொடக்க வீரர்கள் சரியாக ஆடாததே தோல்விக்கு காரணமாகி விட்டது. மேலும் நேற்றைய போட்டியில் கேப்டன் அக்சர் படேல், மிட்ச்செல் ஸ்டார்க் ஆடாதது பெரும் பின்னடைவாகி விட்டது. இந்த தோல்வி குறித்து பேசிய டெல்லி அணியின் பொறுப்பு கேப்டன் டாப் டூ பிளிசிஸ், ''நாங்கள் களத்தில் சிறப்பாக இருந்தோம் என்று உணர்ந்தோம். வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்ப்டுத்தினார்கள்.
கடைசி இரண்டு ஓவர்களில் கிட்டத்தட்ட 50 ரன்கள் விட்டுக் கொடுத்து விட்டோம். இது எங்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்து விட்டது. அக்சர் படேல், மிட்ச்செல் ஸ்டார்க் இல்லாததும் பின்னடைவை ஏற்படுத்தியது'' என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதனால் ஆர்சிபி முதன்முறையாக கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.