வான்கடேயில் விழுந்த ’இடி” - 6, 6, 6 விளாசி பாண்டியா ஓவரை பொளந்து கட்டிய தோனி– 206 ரன்கள் குவித்த சிஎஸ்கே!

First Published Apr 14, 2024, 10:05 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 29ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தோனியின் அதிரடியால் 206 ரன்கள் குவித்துள்ளது.

MI vs CSK, MS Dhoni

மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 29ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

Mumbai Indians vs Chennai Super Kings, 29th Match

அதன்படி சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஜிங்க்யா ரஹானே மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

MI vs CSK 29th IPL Match

இதில் ரஹானே 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ரவீந்திராவும் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 21 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். ஷ்ரேயாஸ் கோபால் வீசிய பந்தில் ரச்சின் ரவீந்திரா விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்த நிலையில் நடுவர் அவுட் கொடுக்கவில்லை.

Mumbai Indians vs Chennai Super Kings, 29th Match

இதையடுத்து விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் ரெவியூ எடுக்க அறிவுறுத்த கேப்டன் பாண்டியாவும் ரெவியூ எடுத்தார். இதில், பந்து பேட்டில் பட்டது தெரியவர, அவுட் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

MI vs CSK, IPL 2024

இந்தப் போட்டியில் 33 பந்துகளில் சிக்ஸர் அடித்து அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலமாக 58 போட்டிகளில் 57 இன்னிங்ஸ் விளையாடி சிஎஸ்கே அணிக்காக அதிவேகமாக 2000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

Ruturaj Gaikwad 2000 Runs

பின்னர் கெய்க்வாட் 40 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த டேரில் மிட்செல் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுட காத்திருந்த அந்த தருணம் வந்தது.

Shivam Dube

சிஎஸ்கே அணிக்காக தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடும் தோனி களமிறங்கினார். கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தில் வந்த தோனி முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார்.

Mumbai Indians vs Chennai Super Kings, 29th Match

4ஆவது மற்றும் 5ஆவது பந்திலேயும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க 4 பந்துகளில் 20 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். சிஎஸ்கே அணிக்காக 5000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.

Hardik Pandya, MI vs CSK

250 போட்டிகளில் விளையாடிய தோனி 5016 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. இதில் ஷிவம் துபே 38 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Mumbai Indians vs Chennai Super Kings, 29th Match

பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டும், ஷ்ரேயாஸ் கோபால் மற்றும் ஜெரால்டு கோட்ஸி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் முதல் முறையாக ரோகித் சர்மா மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் கேப்டன்களாக இல்லாமல் களமிறங்கி விளையாடினர். 

Mumbai Indians vs Chennai Super Kings, 29th Match

இதற்கு முன்னதாக இரு அணிகளும் 36 ஐபிஎல் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், மும்பை இந்தியன்ஸ் 20 போட்டிகளிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 

click me!