
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 22ஆவது லீக் போட்டி தற்போது எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி கேகேஆர் அணியில் பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
சிஎஸ்கே அணியில் தீபக் சஹார் இல்லாத நிலையில் துஷார் தேஷ்பாண்டே முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே பிலிப் சால்ட் ஆட்டமிழந்துள்ளார். பிலிப் சால்ட் ஆஃப் சைடு பாய்ண்ட்டில் நின்றிருந்த ரவீந்திர ஜடேஜா தாவி பந்தை கேட்ச் பிடித்தார். இதன் மூலமாக முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த 3ஆவது சிஎஸ்கே வீரரானார்.
இதற்கு முன்னதாக லட்சுமிபதி பாலாஜி (டெல்லிக்கு எதிராக) மற்றும் தீபக் சஹார் (ஹைதராபாத் அணிக்கு எதிராக) முதல் பந்திலேயே விக்கெட் எடுத்துள்ளனர். இதே போன்று கேகேஆர் அணியில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்த வீரர்களின் பட்டியலில் பிலிப் சால்ட் இடம் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக பிராண்டன் மெக்கல்லம், மனோஜ் திவாரி, ஜாக் காலீஸ் ஆகியோர் ஆட்டமிழந்துள்ளனர். இவரைத் தொடர்ந்து அங்க்ரிஷ் ரகுவன்ஷி களமிறங்கி இந்த போட்டியின் முதல் பவுண்டரியை அடித்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடினார். முதல் 6 ஓவர்களில் கேகேஆர் ஒரு விக்கெட் இழந்து 56 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் தான் 7ஆவது ஓவரை ரவீந்திர ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே ஸ்வீப் அடிக்க முயற்சித்த இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ரகுவன்ஷி 18 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த ஓவரின் கடைசி பந்தில் சுனில் நரைன் தூக்கி அடிக்க முயற்சித்து தீக்ஷனாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 20 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸ் உள்பட 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் 9ஆவது ஓவரை வீசினார். அந்த ஓவரின் 2ஆவது பந்தில் வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழந்தார். அவர் 3 பந்தில் 3 ரன் மட்டுமே எடுத்தார். இதன் மூலமாக ஜடேஜா 8 பந்தில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
முதல் 10 ஓவர்களில் கேகேஆர் 4 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. போட்டியின் 12 ஆவது ஓவரை வீசிய மகீஷ் தீக்ஷனா 5ஆவது பந்தில் ராம்ன்தீப் சிங் விக்கெட்டை எடுத்தார். 15 ஓவர்கள் முடிவில் கேகேஆர் 5 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
அடுத்து வந்து ரிங்கு 9 ரன்களில் நடையை கட்டினார். இதில், அவர் ஒரு பவுண்டரி, சிக்ஸ் கூட அடிக்கவில்லை. அவர், துஷார் தேஷ்பாண்டே பந்தில் கிளீன் போல்டானார். அதன் பிறகு ரஸல் வந்தார். ஆனால், அவராலும் அடிக்க முடியவில்லை. அவர் தேஷ்பாண்டே பந்தில் 10 ரன்களில் டேரில் மிட்செலிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, சமீர் ரிஸ்வி, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், மகீஷ் தீக்ஷனா, முஷ்தாபிஜூர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
சுனில் நரைன், பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், அங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸல், ராமன்தீப் சிங், ரிங்கு சிங், மிட்செல் ஸ்டார், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.
நிதானமாக விளையாடி வந்த ஷ்ரேயாஸ் ஐயர் கடைசியில் முஷ்தாபிஜூர் ரஹ்மான் பந்தில் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மிட்செல் ஸ்டார் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இம்பேக்ட் பிளேயர் அனுகுல் ராய் 3 ரன், வைபவ் அரோரா 1 ரன் எடுத்தனர். பவுலிங்கைப் பொறுத்த வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் துஷார் தேஷ்பாண்டே மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். முஷ்தாபிஜூர் ரஹ்மான் 2 விக்கெட்டுகள் எடுத்தார். மகீஷ் தீக்ஷனா ஒரு விக்கெட் எடுத்தார்.
இதுவரையில் 4 போட்டிகளில் விளையாடிய முஷ்தாபிஜூர் ரஹ்மான் 9 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரருக்கான பர்பிள் கேப் வென்றார். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இரு அணிகளும் மோதிய 29 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் 18 போட்டிகளிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் சிஎஸ்கே 3 போட்டியிலும், கேகேஆர் 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
மேலும், சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மோதிய 10 போட்டிகளில் சிஎஸ்கே 7 போட்டியிலும், கேகேஆர் 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே விளையாடிய 34 போட்டிகளில் 8ல் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது.
இந்த சீசனில் இதுவரையில் சிஎஸ்கே விளையாடிய 4 போட்டிகளில் 2ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்துள்ளது. ஹோம் மைதானத்தில் நடந்த 2 போட்டியிலும் சிஎஸ்கே வெற்றி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளது. கேகேஆர் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறுவதற்கு 60 சதவிகித வாய்ப்புகள் இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெறுவதற்கு 40 சதவிகித வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.