எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் 22ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் தொடக்க வீரர் பிலிப் சால்ட் முதல் பந்திலேயே ஆட்டமிழந்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 22ஆவது லீக் போட்டி தற்போது எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி கேகேஆர் அணியில் பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
25
CSK vs KKR, Shardul Thakur
சிஎஸ்கே அணியில் தீபக் சஹார் இல்லாத நிலையில் துஷார் தேஷ்பாண்டே முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே பிலிப் சால்ட் ஆட்டமிழந்துள்ளார். பிலிப் சால்ட் ஆஃப் சைடு பாய்ண்ட்டில் நின்றிருந்த ரவீந்திர ஜடேஜா தாவி பந்தை கேட்ச் பிடித்தார். இவரைத் தொடர்ந்து அங்க்ரிஷ் ரகுவன்ஷி களமிறங்கி இந்த போட்டியின் முதல் பவுண்டரி அடித்து விளையாடி வருகிறார்.
35
CSK vs KKR, 22nd IPL 2024 Match
இதுவரையில் இந்த தொடரில் சிஎஸ்கே விளையாடிய 4 போட்டிகளில் ஹோம் மைதானத்தில் நடந்த 2 போட்டிகளிலும் சிஎஸ்கே வெற்றி பெற்றிருக்கிறது. அவே மைதானத்தில் நடந்த 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ஆனால், கேகேஆர் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் 2 போட்டி அவே மைதானத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.