
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து எம்.எஸ்.தோனி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக புதிய கேப்டனாக 27 வயது நிரம்பிய ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார்.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய 4 போட்டிகளில் 2ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. இன்று நடக்கும் 5ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சென்னையின் கோட்டையான எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டிக்கு முன்னதாக சிஎஸ்கேயின் புதிய கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்டின் ஆண்டு வருமானம் எவ்வளவு என்று பார்க்கலாம் வாங்க. கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடந்த டி20 போட்டியின் மூலமாக இந்திய அணியில் அறிமுகமானவர் ருதுராஜ் கெய்க்வாட். கடைசியாக கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில் இடம் பெற்று விளையாடியுள்ளார்.
இதுவரையில், 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 106 ரன்களும், 17 டி20 போட்டிகளில் விளையாடி 458 ரன்களும் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 123* ரன்கள் எடுத்துள்ளார். ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணிக்கு தலைமை ஏற்று வழிநடத்தி தங்கம் வென்று கொடுத்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று ருதுராஜ் கெய்க்வாட் விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் ரூ.20 லட்சத்திற்கு இடம் பெற்றிருந்த கெய்க்வாட், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ரூ.6 கோடிக்கு விளையாடி வருகிறார். இதுவரையில் 56 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய கெய்க்வாட், 1885 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 101* ரன்கள் எடுத்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு சதம், 14 அரைசதங்கள் அடித்துள்ளார். மேலும், 170 பவுண்டரியும், 75 சிக்ஸரும் அடித்துள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு ரூ.36 கோடி ஆகும். மாதந்தோறும் ரூ.50 முதல் ரூ.60 லட்சம் வரையில் வருமானம் ஈட்டுகிறார். அல்லது வருடத்திற்கு ரூ.8 கோடி வரையில் வருமானம் ஈட்டுவதாக சொல்லப்படுகிறது.
மகாராஷ்டிரா பிரீமியர் லீக் தொடரின் புனேரி பாப்பா அணியில் இடம் பெற்று விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் ரூ.14.8 கோடி (3 ஆண்டுகள்) வரையில் வருமானம் பெறுகிறார். புனேரி அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.
கெய்க்வாட்டிற்கு பிசிசிஐ இன்னும் வருடாந்திர ஒப்பந்தம் அளிக்கவில்லை. ஒவ்வொரு டி20 போட்டிக்கும், உள்நாட்டு போட்டி கட்டணத்துடன் ரூ.3 லட்சம் பெறுகிறார். சிஎஸ்கே அணியில் ரூ.6 கோடி சம்பளம் பெறுகிறார்.
ருதுராஜ் கெய்க்வாட் ஒப்பந்தம்:
My11Circle இன் பிராண்ட் தூதர்களாக கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். GoKratos பிராண்ட் தூதராக ருதுராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ருத்ராஜ் கெய்க்வாட் முதலீடுகள்:
சொத்துக்கள் மற்றும் முதலீடுகள் அவரது நிகர மதிப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளன. பங்குச் சந்தை மற்றும் வணிக முதலீடுகளின் மூலமாக அதிக வருமானம் ஈட்டி வருகிறார்.
ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு, ஐபிஎல், போட்டி கட்டணம், பிராண்ட் ஒப்பந்தம் ஆகியவற்றின் மூலமாக வருமானம் வருகிறது. இது தவிர விளம்பரம், முதலீடு, பங்கு சந்தை ஆகியவற்றின் மூலமாக வருமானம் ஈட்டி வருகிறார்.
ருதுராஜ் கெய்க்வாட்
Money Controlன் படி இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் புனேவில் ரூ.8 கோடி மதிப்பில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கினார். அவரது அபார்ட்மெண்ட் புனே சோமேஸ்வர்வாடியில் அமர் லேண்ட்மார்க் வளாகத்தில் அமைந்துள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் கார் கலெக்ஷன்:
கெய்க்வாட் தற்போது ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ கார் வைத்துள்ளார். BMW M8 Competition Coupe என்று விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் பைக்:
பைக் மீது ஆர்வம் கொண்ட ருதுராஜ் கெய்க்வாட், Jawa 42 Bobber என்ற மாடல் பைக்கை கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் வாங்கினார். இதனுடைய மதிப்பு ரூ.2.07 லட்சம்.