பிளே ஆஃப் செல்லும் அணிகள் பற்றி பேசிய அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப்: எந்தெந்த அணிகள் தெரியுமா?

First Published | Apr 8, 2024, 2:16 PM IST

ஐபிஎல் 2024 தொடரில் பிளே ஆஃப் செல்லும் அணிகள் பற்றி பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் இருவரும் வெளிப்படையாக பேசியுள்ளனர்.

RCB

கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் தொடக்க விழாவுடன் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பிரம்மாண்டமாக தொடங்கியது. தொடக்க விழாவில் அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப் ஆகியோர் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Royal Challengers Bengaluru

தற்போது வரையில் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் 21 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நமப்ர் 1 இடம் பிடித்துள்ளது. இதே போன்று கொல்கத்தா நைட் நைடர்ஸ் அணியானது விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 2ஆவது இடம் பிடித்துள்ளது.

Tap to resize

Kolkata Knight Riders

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் விளையாடிய 4 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று 3ஆவது இடத்தில் உள்ளது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடிய 4 போட்டிகளில் 2ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் முறையே 4, 5, 6 ஆகிய இடங்களை பிடித்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் 3 தோல்விகளுக்கு பிறகு ஒரு வெற்றியை பெற்று 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Chennai Super Kings

டெல்லி கேபிடல்ஸ் 4 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் இருவரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானுடன் கலந்துரையாடினர்.

Royal Challengers Bengalaru

மேலும், அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் உருவாகியுள்ள Bade Miyan Chote Miyan என்ற படத்தில் அக்‌ஷய குமார், டைகர் ஷெராஃப், மனுஷி சில்லார், பிருத்வி ராஜ், சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோர் உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 10 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

IPL 2024 Playoffs

அப்போது அவர்களிடம் பிளே ஆஃப் செல்லும் அணிகள் குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்த அக்‌ஷய குமார் வெளிப்படையாக பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பெயரை பட்டியலிட்டுள்ளார்.

Mumbai Indians

இதே போன்று, டைகர் ஷெராஃப் தனக்கு பிடித்த அணியாக மும்பை இந்தியன்ஸ் அணியையும் பிடித்த வீரராக ஹர்திக் பாண்டியா பெயரையும் குறிப்பிட்டார். மேலும், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று 4 அணிகள் பிளே ஆஃப் செல்லும் என்று தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Mumbai Indians

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இருவரும் ஒரே மாதிரியாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் பெயரை இருவரும் குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!