வாரி வழங்கிய பவுலர்கள், இனியும் நம்பி பலனில்லை – புதுசா வேகப்பந்து வீச்சாளரை களமிறக்கிய டெல்லி!

First Published | Apr 8, 2024, 3:48 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த 20ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் டெல்லி அணி ஹாரி ப்ரூக்கிற்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்துள்ளது.

Delhi Capitals

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 20ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர்.

MI vs DC, 20th IPL 2024

கடைசியில் வந்த ரொமாரியா ஷெப்பர்ட், ஆன்ரிச் நோர்ட்ஜே வீசிய கடைசி ஓவரில் 4, 6, 6, 6, 4, 6 என்று மொத்தமாக 32 ரன்கள் குவித்தார். இதுதான் மும்பைக்கு வெற்றி தரப்போகிறது என்பது அப்போது தெரியாது.

Tap to resize

Mumbai Indians

டெல்லி வீரர் ஆன்ரிச் நோர்ட்ஜே 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் எடுத்து 65 ரன்கள் கொடுத்துள்ளார். இஷாந்த் சர்மா 3 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்தார். ஜே ரிச்சர்ட்சன் 4 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்தார். அக்‌ஷர் படேல் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் எடுத்து 35 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.

Romario Shepherd

பின்னர் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அபிஷேக் போரெல் 41 ரன்களில் நடையை கட்டினார். பிரித்வி ஷா 66 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.

Mumbai Indians vs Delhi Capitals

ஆனால், பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும் அதிரடியாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்ஸ் உள்பட 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Mumbai Indians

இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் 29 ரன்களில் தோல்வியை தழுவியது. தோல்விக்கு பிறகு பேசிய டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியிருப்பதாவது: பவர்பிளேயில் எங்களிடம் போதுமான ரன்கள் இல்லை.

Rishabh Pant, Delhi Capitals

ஆனால், அடுத்த சில ஓவர்கள் நன்றாகவே பேட்டிங் செய்தோம். ஆனால், ஓவர்களுக்கு 15 ரன்கள் வீதம் அடிப்பது சாத்தியமல்ல. பவுலர்கள் விக்கெட்டுக்குள் பந்து வீச வேண்டும், தேவைப்படும் போது மெதுவாகவும், வேகமாகவும் என்று மாறி மாறி பந்து வீச வேண்டும்.

Delhi Capitals

மேலும், பந்து வீச்சாளர்களை நிலைமையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். டெத் ஓவர் பவுலர்கள் மற்றும் பேட்டிங் என்று சில பகுதிகளில் நாம் மேம்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

MI vs DC, 20th IPL 2024

இந்த நிலையில், தான் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஹாரி ப்ரூக் தனிப்பட்ட காரணத்திற்காக விலகிய நிலையில் இதுவரையில் அவருக்கு பதிலாக மாற்று வீரர் யாரையும் டெல்லி கேபிடல்ஸ் அறிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில் தான் நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் தற்போது மாற்று வீரரை டெல்லி கேபிடல்ஸ் அறிவித்துள்ளது.

Romario Shephed

அதன்படி தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளரான லிசாட் வில்லியம்ஸை மாற்று வீரராக அறிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம் பெற்று விளையாடி வரும் லிசாட் 2 டெஸ்ட், 4 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 11 டி20 போட்டிகளில் இடம் பெற்று விளையாடியுள்ளார். தற்போது ரூ.50 லட்சத்திற்கு அடிப்படை விலைக்கு அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!