Chennai Super Kings
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் இன்று நடக்கும் 22ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
CSK vs KKR, 22nd IPL Match 2024
சென்னையின் ஹோம் மைதானமான எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
Chennai Super Kings
இந்தப் போட்டியில் தீபக் சஹார் காயம் காரணமாக இடம் பெறவில்லை. ஷர்துல் தாக்கூர் அணியில் இடம் பெற்றுள்ளார். இதே போன்று சமீர் ரிஸ்வி இந்த போட்டியில் இடம் பெற்றுள்ளார்.
Kolkata Knight Riders
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
சுனில் நரைன், பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், அங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸல், ராமன்தீப் சிங், ரிங்கு சிங், மிட்செல் ஸ்டார், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.
Chennai Super Kings vs Kolkata Knight Riders, 22nd IPL 2024 Match
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, சமீர் ரிஸ்வி, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், மகீஷ் தீக்ஷனா, முஷ்தாபிஜூர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே.
CSK vs KKR
இதற்கு முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இரு அணிகளும் மோதிய 29 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் 18 போட்டிகளிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் சிஎஸ்கே 3 போட்டியிலும், கேகேஆர் 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
Chennai Super Kings,
மேலும், சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மோதிய 10 போட்டிகளில் சிஎஸ்கே 7 போட்டியிலும், கேகேஆர் 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே விளையாடிய 34 போட்டிகளில் 8ல் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது.
CSK vs KKR, 22nd IPL 2024
சுனில் நரைனுக்கு எதிரான எம்.எஸ்.தோனி எதிர்கொண்ட 74 பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த சீசனில் இதுவரையில் சிஎஸ்கே விளையாடிய 4 போட்டிகளில் 2ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்துள்ளது. ஹோம் மைதானத்தில் நடந்த 2 போட்டியிலும் சிஎஸ்கே வெற்றி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளது.
Chennai Super Kings
இதே போன்று கேகேஆர் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது. மேலும், ஹோம் மைதானத்தில் நடந்த போட்டியிலும், அவே மைதானத்தில் நடந்த 2 போட்டியிலும் கேகேஆர் வெற்றி பெற்றிருக்கிறது.
Kolkata Knight Riders
இதுவரையில் நடந்த போட்டிகளின் படியும், சேப்பாக்கத்தில் நடந்த போட்டிகளின்படியும், இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறுவதற்கு 60 சதவிகித வாய்ப்புகள் இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெறுவதற்கு 40 சதவிகித வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.