ஐபிஎல் போட்டியில் அதிக மதிப்புமிக்க அணி எது? சென்னை சூப்பர் கிங்ஸா? மும்பை இந்தியன்ஸா?

First Published | Sep 8, 2024, 11:35 AM IST

Most Valuable IPL Franchise: ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மிகவும் வெற்றிகரமான அணிகளாகத் தொடர்கின்றன. இந்த 2 அணிகளும் இதுவரை தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. அதன்பிறகு கேகேஆர் 3 முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது. 

Chennai Super Kings - CSK

Most Valuable IPL Franchise: ஐபிஎல் 2025க்கான ஏற்பாடுகளை பிசிசிஐ ஏற்கனவே தொடங்கிவிட்டது. வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு முன்னதாக வீரர்களுக்கான மெகா ஏலம் நடத்தப்பட உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகளுடன் பிசிசிஐ ஏற்கனவே பல கூட்டங்களை நடத்தியுள்ளது.

Chennai Super Kings

ஐபிஎல் 2025க்கான புதிய முடிவுகள், புதிய விதிகளை கொண்டு வருவதற்காக அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும், பல முடிவுகளில் அனைத்து ஐபிஎல் அணிகளும் ஒருமித்த கருத்துக்கு வராததால் கிரிக்கெட் வட்டாரங்களில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் அணிகள் குறித்த மேலும் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

Latest Videos


Mumbai Indians

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024ல் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மோசமான ஆட்டத்தால் படுதோல்வியடைந்தது. 2024ல் மும்பை இந்தியன்ஸை ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது.

புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் 17வது சீசனில் மும்பை இந்தியன்ஸை வழிநடத்தினார், ஆனால் அவர் அணியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லத் தவறிவிட்டார். இதனால் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தது.

இதனால் ரோகித் சர்மாவை மீண்டும் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். அதே நேரத்தில் மும்பை அணியின் புகழுக்கும் களங்கம் ஏற்பட்டது.

Royal Challengers Bengaluru

கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் குறிப்பாக ரோகித் சர்மாவின் ரசிகர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களையும், கேலி குறிப்புகளையும் எதிர்கொண்டது. இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் நிதி ரீதியாக வலுவான நிலையில் உள்ளது. டி அண்ட் பி அட்வைசரியின் அறிக்கையின்படி, ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மிகவும் மதிப்புமிக்க ஐபிஎல் அணியாக உள்ளது.

மும்பை அணி மதிப்பீட்டில் சென்னை சூப்பர் கிங்ஸை (சிஎஸ்கே) விட அதிக எண்ணிக்கையில் உள்ளது. மும்பைக்கு கடைசியாக 2020ல் பட்டம் கிடைத்தது. கடந்த சில ஆண்டுகளாக அணி நிலைத்தன்மைக்காக போராடி வருகிறது. ஆனால், சிறப்பான பலன்களை அடையத் தவறி வருகிறது. ​​​​​​​

SRH - Sunrisers Hyderabad

மும்பை இந்தியன்ஸுக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது மிகவும் மதிப்புமிக்க அணியாக உள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தலைமையில் சென்னை அணி ஐபிஎல் போட்டியில் வெற்றிகரமான அணியாக முன்னேறியது. ஐந்து முறை தோனி சென்னை அணியை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார். 

இருப்பினும், கடந்த சீசனில் (ஐபிஎல் 2024) சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன்சியில் இருந்து தோனி விலகினார். அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கேப்டன்சியை வழங்கியது சிஎஸ்கே. தோனி ஐபிஎல் 2024ல் வீரராக அணியில் தொடர்ந்தார். இருப்பினும், ஐபிஎல் 2025 சீசனில் தோனி வீரராக இருப்பாரா?  இல்லையா? என்பதுதான் பெரிய கேள்வி. 

தற்போது ஐபிஎல் போட்டியில் மிகவும் மதிப்புமிக்க அணிகளாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மீண்டும் தங்கள் வெற்றிப் பயணத்தை வரும் சீசனில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2025ல் இந்த அணிகளை சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்று இரண்டு அணிகளின் ரசிகர்களும் விரும்புகிறார்கள்.

KKR - Kolkata Knight Riders

மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு அடுத்தபடியாக கடந்த சீசனில் (ஐபிஎல் 2024) சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் போட்டியில் மிகவும் மதிப்புமிக்க அணிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதற்கிடையில், ஐபிஎல் போட்டியின் மொத்த மதிப்பீடு 10.6 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு நேர்மாறாக மகளிர் பிரீமியர் லீக்கின் மதிப்பீடுகள் அதிகரித்து வருகின்றன. 

பணக்கார லீக்கின் மதிப்பு 2023ல் ரூ.92,500 கோடியாக இருந்த நிலையில், தற்போது அது ரூ.82,700 கோடியாக குறைந்துள்ளது. மகளிர் ஐபிஎல் போட்டியின் மதிப்பு 8 சதவீதம் உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு ரூ.1250 கோடியாக இருந்தது, தற்போது ரூ.1350 கோடியாக உயர்ந்துள்ளது.

click me!