Ollie Pope, ENG vs SL Test: சச்சின், தோனி, கோலி யாரும் படைக்காத சாதனையை படைத்த இங்கிலாந்து வீரர் ஆலி போப்!

First Published | Sep 7, 2024, 8:55 PM IST

இங்கிலாந்து அணியின் இளம் வீரரான ஆலி போப் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 வெவ்வேறு நாடுகளுக்கு எதிராக வரிசையாக 7 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார். 2020 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக சதங்களை குவித்து வரும் ஆலி போப், இந்திய ஜாம்பவான்கள் படைக்காத சாதனையை படைத்துள்ளார்.

England vs Sri Lanka Test

சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா என்று எந்த ஜாம்பவான்களும் படைக்காத சாதனையை இங்கிலாந்து அணியின் இளம் வீரரான ஆலி போப் படைத்துள்ளார். அப்படி என்ன சாதனை என்று நீங்கள் கேட்கலாம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 வெவ்வேறு நாடுகளுக்கு எதிராக வரிசையாக 7 சதங்களை அடித்துள்ளார்.

எந்த நாட்டிற்கு எதிராக எல்லாம் அடித்திருக்கிறார்? எப்போது அடித்திருக்கிறார் என்பது குறித்து எல்லாம் இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணியில் இடம் பெற்று விளையாடி வரும் ஆலி போப் (ஒல்லி போப்), இதுவரையில் 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதில் 6 சதங்கள், 13 அரைசதங்கள் உள்பட மொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2702 ரன்கள் எடுத்துள்ளார்.

Ollie Pope, England vs Sri Lanka Test

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில், முதல் 2 போட்டிகளில் இங்கிலாந்து முறையே 5 விக்கெட்டுகள் மற்றும் 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தான் இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஆலி போப் டெஸ்ட் கிரிக்கெட் என்று கூட பார்க்காமல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் 19 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 156 பந்துகளில் 154 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் சதம் விளாசியதன் மூலமாக புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

Latest Videos


England vs Sri Lanka, 3rd Test

இந்த போட்டியில் அவர் 103 பந்துகளில் 103 ரன்கள் எடுத்ததன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார். இதன் மூலமாக யாரும் படைக்காத சாதனையை ஆலி போப் படைத்துள்ளார். இந்த 48 டெஸ்ட் போட்டிகளில் ஆலி போப் பல்வேறு அணிகளுக்கு எதிராக விளையாடி சதம் அடித்துள்ளார். ஆனால், ஒரே அணிக்கு எதிராக 2 சதம் அடிக்காமல் வெவ்வேறு அணிகளுக்கு எதிராகவும் வரிசையாக 7 சதங்கள் அடித்த வீரர் என்ற விசித்திரமான சாதனையை அவர் படைத்துள்ளார்.

England vs Sri Lanka, 3rd Test

2020 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 2ஆவது சதம் அடித்தார். இதையடுத்து பாகிஸ்தான், அயர்லாந்து, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் என்று 6 அணிகளுக்கு எதிராக 6 சதங்கள் அடித்திருந்தார். இந்த நிலையில் தான் இன்று இலங்கைக்கு எதிராக தனது 7ஆவது சதத்தை பதிவு செய்து புதிய வரலாற்று சாதனையை தனக்கு சொந்தமாக்கியிருக்கிறார்.

Ollie Pope, England vs Sri Lanka

இதற்கு முன்னதாக எந்த ஒரு இந்திய ஜாம்பவானும் இது போன்று விசித்திரமான சாதனையை படைக்கவில்லை. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சாதனைகளை இந்திய ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் படைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!