Virat Kohli Modern Cricket: நவீன கிரிக்கெட்டின் சாதனையை முறியடித்த ஒன் அண்ட் ஒன் மேஸ்ட்ரோ விராட் கோலி!

First Published Sep 7, 2024, 10:10 PM IST

Virat Kohli Record Breaker: டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் வடிவங்களில் சிறந்து விளங்கும் விராட் கோலியின் விதிவிலக்கான திறமைகள், கிரிக்கெட்டில் அவரது நிலைத்தன்மை ஆகியவை அவரை வரலாற்றில் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோலியின் திறமைக்கு ஈடு இணையில்லை.

Virat Kohli

விராட் கோலியின் விதிவிலக்கான திறமைகள், கிரிக்கெட்டில் அவரது நிலைத்தன்மை ஆகியவை அவரை வரலாற்றில் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் வடிவங்களிலும் சிறந்த வீரராக தன்னை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோலியின் திறமைக்கு ஈடு இணையில்லை. கிரிக்கெட் மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், நாட்டமும் அவரை கிரிக்கெட்டின் உந்து சக்தியாக மாற்றியுள்ளது.

Virat Kohli Cricket Records

வெற்றிக்கான தீராத பசியுடன் உலகளவில் ஆர்வமுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு தன்னை முன் மாதிரியாக காட்டியுள்ளார். விளையாட்டு மீதான கோலியின் ஆர்வமும், கிரிக்கெட்டில் அவரது சாதனைகளும் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியின் குறிப்பிடத்தக்க சாதனைகள் பற்றி பார்க்கலாம் வாங்க…

Latest Videos


Virat Kohli ODI Records

சதங்களும், ரன்களும்:

ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள்: 2023 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி போட்டியின் போது, ​​விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் (50 சதங்கள்) அடித்த சாதனையை முறியடித்தார். இந்தப் போட்டியில் 106 பந்துகளில் 50ஆவது சதத்தை பதிவு செய்த கோலி, சச்சின் டெண்டுல்கரின் நீண்ட கால சாதனையான 49 சதங்கள் சாதனையை முறியடித்தார்.

சேஸ் மாஸ்டர்:

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சேஸிங்கில் மட்டும் 27 சதங்கள் அடித்துள்ளார்.

Virat Kohli Most Runs

அதிவேகமாக 8000, 9000, 10,000, 11000, 12,000 ரன்கள்:

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 8000, 9000, 10,000, 11000, 12,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.

அதிவேகமாக 20000 ரன்களை கடந்த வீரர்:

417 போட்டிகளில் 376 இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 20,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

Virat Kohli Test Cricket

டெஸ்ட் கிரிக்கெட்:

இரட்டை சதங்கள்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 இரட்டை சதங்கள் அடித்துள்ளார். இந்திய வீரர் அடித்த அதிகபட்ச இரட்டை சதம் இதுவாகும். சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் இருவரும் தலா 6 முறை இரட்டை சதங்கள் அடித்துள்ளனர். மேலும், சேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

டெஸ்ட் தொடர்:

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் என்ற வரலாற்று சாதனையை கோலி படைத்தார். கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கோலி தலைமையிலான இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்று வென்று வரலாற்று சாதனையை படைத்தது.

Virat Kohli 4000 Runs

டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்கள்

சர்வதேச டி20 போட்டிகளில் 4000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 2022 ஆம் ஆண்டு அடிலெய்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் போது கோலி இந்த சாதனையை நிகழ்த்தினார்.  

கேப்டன் சாதனைகள்:

எம்.எஸ்.தோனி, ரோகித் சர்மா வரிசையில் தன்னை ஒரு வெற்றிகரமான கேப்டனாக காட்டினார். ஆனால், ஒரு முறை கூட உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுக்கவில்லை. 68 போட்டிகளில் 40 போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்தார்.

Virat Kohli Captain Records

ஒரு காலண்டர் ஆண்டில் அதிக வெற்றிகள்:

ஒரு கேப்டனாக ஒரு காலண்டர் ஆண்டில் விராட் கோலி 46 சர்வதேச வெற்றிகளை பெற்று ஆஸ்திரேலியா வீரர் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார்.

வங்கதேச டெஸ்ட் தொடர்:

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறார். 19 ஆம் தேதி தொடங்கும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியிலும் பல சாதனைகள் படைப்பார் என்று

click me!