எப்படி அடிக்கணும் என்று அடிச்சு காட்டிய ஷிவம் துபே – மிரண்டு போன கொல்கத்தா – சிஎஸ்கே 3ஆவது வெற்றி!

First Published Apr 8, 2024, 11:36 PM IST

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 22 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

CSK vs KKR, 22nd IPL 2024

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 22ஆவது லீக் போட்டி எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் நைடர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 34 ரன்கள் எடுத்தார். இதில், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

Chennai Super Kings

முஷ்தாபிஜூர் ரஹ்மான் 2 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் (9) கைப்பற்றிய வீரருக்கான பர்பிள் கேப் வென்றார். மகீஷ் தீக்‌ஷனா ஒரு விக்கெட் கைப்பற்றினார். பின்னர் எளிய இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரச்சின் ரவீந்திரா 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

CSK vs KKR

அடுத்து ருத்ராஜ் கெய்க்வாட் உடன் டேரில் மிட்செல் இணைந்து நிதானமாக விளையாடினார். இதில், மிட்செல் 25 ரன்களில் ஆட்டமிழக்க, ஷிவம் துபே களமிறங்கினார். இதில் அதிரடியாக விளையாடிய துபே 18 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 28 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் சிஎஸ்கேயின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை இருந்த நிலையில், தோனி களமிறங்கினார். ஆனால், 3 பந்துகளில் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

MS Dhoni

கேப்டன் பொறுப்பை உணர்ந்து விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் ஒரு கேப்டனாக தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். தோனி ஒரு கேப்டனாக 21 அரைசதங்கள் அடித்துள்ளார். கடைசியில் ருதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 67 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். சிஎஸ்கே 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

MS Dhoni CSK

இந்த வெற்றியின் மூலமாக சிஎஸ்கே விளையாடிய 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளது. மேலும், ஹோம் மைதானத்தில் 3ஆவது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக கொல்கத்தா 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

CSK vs KKR Live

சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா விளையாடிய 14 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. 10 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. மேலும், கேகேஆர் அணிக்கு எதிராக எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற 11 ஐபிஎல் போட்டிகளில் 8 போட்டிகளில் சிஎஸ்கே வெற்றி பெற்றிருக்கிறது.

CSK vs KKR, MA Chidambaram Stadium

ஐபிஎல் கிரிக்கெட்டில் சிஎஸ்கே அணிக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர்களின் ரவீந்திர ஜடேஜா 15 முறை வென்று தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். தோனியும், 15 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். சுரேஷ் ரெய்னா 12 முறையும், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மைக்கேல் ஹஸ்ஸியும் 10 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளனர்.

click me!