CSK vs KKR 22nd IPL 2024
எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 22ஆவது லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி கேகேஆர் அணியில் பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
Ravindra Jadeja CSK
இதில் பிலிப் சால்ட் ரன் ஏதும் எடுக்காமல் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து அங்க்ரிஷ் ரகுவன்ஷி 24 ரன்னிலும், சுனில் நரைன் 27 ரன்னிலும் ஜடேஜாவின் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். இதே போன்று ஜடேஜாவின் அடுத்த ஓவரில் 3 ரன்னில் வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழந்தார்.
CSK vs KKR Live
ராமன்தீப் சிங் 13 ரன்னிலும், ரிங்கு சிங் 9 ரன்னிலும், ஆண்ட்ரே ரஸல் 10 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடி வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக கேகேஆர் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.
IPL 2024
பவுலிங்கைப் பொறுத்த வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் துஷார் தேஷ்பாண்டே மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். முஷ்தாபிஜூர் ரஹ்மான் 2 விக்கெட்டுகள் எடுத்தார். மகீஷ் தீக்ஷனா ஒரு விக்கெட் எடுத்தார்.
Ravindra Jadeja 3 Wickets
இதுவரையில் 4 போட்டிகளில் விளையாடிய முஷ்தாபிஜூர் ரஹ்மான் 9 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரருக்கான பர்பிள் கேப் வென்றார். இந்த நிலையில் இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா 2 கேட்சுகள் பிடித்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 கேட்சுகள் பிடித்து அதிக கேட்சுகள் பிடித்தவர்களின் பட்டியலில் ரோகித் சர்மா உடன் இணைந்துள்ளார். டெல்லிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா ஒரு கேட்ச் பிடித்து 100 கேட்சுகள் பிடித்து பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.
Jadeja 100 Catches
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்தவர்கள்:
110 – விராட் கோலி
109 – சுரேஷ் ரெய்னா
103 – கெரான் போலார்டு
100 – ரோகித் சர்மா
100 – ரவீந்திர ஜடேஜா*
98 – ஷிகர் தவான்
Ravindra Jadeja
அதுமட்டுமின்றி ஐபிஎல் கிரிக்கெட்டில் 15 முறை 3 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.
இதற்கு முன்னதாக 3 விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள்:
ஜஸ்ப்ரித் பும்ரா - 20
லசித் மலிங்கா – 19
சுனில் நரைன் – 15
ரவீந்திர ஜடேஜா – 15
டுவைன் பிராவோ – 13
CSK vs KKR
கேகேஆர் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள்:
புவனேஷ்வர் குமார் – 32
யுஸ்வேந்திர சஹால் – 28
ரவிச்சந்திரன் அஸ்வின் – 24
ரவீந்திர ஜடேஜா – 22
இதையடுத்து, 138 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சிஎஸ்கே விளையாடி வருகிறது.