சார் கங்குலி கிட்டலாம் பேசணும்னு நெனச்சாலே உடம்பு நடுங்குது அடிவாங்க முடியாது.. பயத்தில் நடுங்கிய தரகர்..!

First Published | Nov 23, 2020, 8:08 AM IST

சூதாட்ட பிரச்சினையில் சிக்கி இந்திய அணி முற்றிலும் சிதைந்து தடுமாறியபோது அணியை புதிதாக கட்டமைத்து அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றவர் என்றால் அது கங்குலிதான் என்று சொன்னால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு அணியை வலுப்படுத்தினார்.
 

மேலும் இவரது தலைமையில் அணி வீரர்கள் சரியாக தேர்வு செய்யப்பட்டு இளம்வீரர்கள் ஜொலிக்க ஆரம்பித்தனர். மேலும் உலகளவில் கங்குலியின் இந்த கேப்டன்சி செயல்பாடு புகழப்பட்டது. இந்திய அணியின் மறுக்கமுடியாத பெரிய தலைவனாக கங்குலி உருவெடுத்தார்.
கங்குலி தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன் சூதாட்ட பிரச்சினையில் சிக்கி அசாருதீன் ஜடேஜா ஆகிய முன்னணி வீரர்கள் தடை செய்யப்பட்டனர். அதன் பிறகும் தற்போது வரை ஐபிஎல் தொடரில் சூதாட்ட பிரச்சனை காரணமாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட சில வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் சூதாட்ட விவகாரத்தில் சிக்கி சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது
Tap to resize

கங்குலியிடம் இதுவரை சூதாட்ட தரகர்கள் சந்தித்துப் பேசியது கூட கிடையாது. மேலும் அவரை மேட்ச் பிக்சிங் செய்யும்படி கேட்டது கிடையாது என்று சூதாட்ட தரகர் ஒருவர் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.
கடைசிவரை கங்குலியிடம் அவர்கள் நெருங்க கூட முடியவில்லை ஏனெனில் களத்தில் ஆக்ரோஷமாக இருக்கும் கங்குலி இந்திய அணியை பெரிதும் நேசிக்கிறார். அவரிடம் இதுபோன்ற சூதாட்ட தகவல்களையோ அல்லது செயல்களையோ கொண்டு சென்றால் அவர் என்ன செய்வார் என்றே தெரியாது
அந்த அளவிற்கு அவர் மீதுள்ள பயம் காரணமாக சூதாட்ட தரகர்கள் அவரை நெருங்கியதே இல்லை என்று அந்த பெயர் குறிப்பிடாத புக்கி தகவலை வெளியிட்டுள்ளார்.

Latest Videos

click me!