தவறாக நடந்து கொண்டதாக நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு: பிருத்வி ஷா மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு!

Published : Feb 22, 2023, 12:51 PM ISTUpdated : Feb 22, 2023, 12:52 PM IST

தன்னிடம் தவறாக நடந்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மீத் போஜ்புரி நடிகை பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.  

PREV
15
தவறாக நடந்து கொண்டதாக நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு: பிருத்வி ஷா மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு!
பிருத்வி ஷா - சப்னா கில்

பிருத்வி ஷா தனது நண்பர்களுடன் மும்பையில் உள்ள பார்லே ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, போஜ்பூரி நடிகை சப்னா கில்லும் அவரது நண்பர்களும் பிருத்வி ஷாவிடம் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அவருடம் 2 புகைப்படங்களுக்கு மேல் எடுக்க கூடாது என்று சொல்லியும், மறுபடியும், மறுபடியும் அவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டே இருந்துள்ளனர்.

25
பிருத்வி ஷா - சப்னா கில்

ஒருகட்டத்தில் அவர்களுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின் கைகலப்பாகியுள்ளது. இதன் காரணமாக பிருத்வி ஷாவின் நண்பரது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிருத்வி ஷா அளித்த புகாரின் பேரில் ஓஷிவாரா போலீசார் வழக்குப் பதிவு செய்து சப்னா கில் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். கடந்த 17 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட அவர்களுக்கு ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து அவர்கள் வெளியில் வந்தனர்.

35
பிருத்வி ஷா - சப்னா கில்

இந்த நிலையில், வெளியில் வந்த சப்னா கில், பிருத்வி ஷா மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். மும்பை விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சப்னா கில் கூறியிருப்பதாவது: தனது நண்பர் ஷோபிட் தாக்கூர் தீவிர கிரிக்கெட் ரசிகர். ஆதலால், அவர் பிருத்வி ஷாவிடம் செல்ஃபி கேட்டுள்ளார். 

45
பிருத்வி ஷா - சப்னா கில்

ஆனால், அதற்கு மது போதையிலிருந்த பிருத்வி ஷா மற்றும் அவரது நண்பர்கள் தாக்கூரை கடுமையாக தாக்கினர். இதனை தடுக்க சென்ற என்னையும் தகாத வார்த்தைகளில் திட்டியதோடு, தன்னிடம் தவறாக நடந்து கொண்டுள்ளனர் என்று பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

55
பிருத்வி ஷா - சப்னா கில்

கிட்டத்தட்ட 10 பிரிவுகளின் கீழ் பல புகார்களை அளித்துள்ள நிலையில், அவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. சப்னா கில் மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டதிலிருந்து இருவரும் ஒருவர் மீது ஒருவராக பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். இதன் காரணமாக இதுவரையில் பிருத்வி ஷா மீது போலிசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories