இந்தியாவில் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் நடந்து வருகிறது. இந்தியா வந்த ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
27
சூர்யகுமார் யாதவ் திருப்பதி ஏழுமலையான் தரிசனம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூலமாக சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்தப் போட்டியின் போது தனது குடும்பத்தினரை நாக்பூர் மைதானத்திற்கு அழைத்து வந்திருந்தார்.
37
சூர்யகுமார் யாதவ் திருப்பதி ஏழுமலையான் தரிசனம்
போட்டிக்கு முன்னதாக மைதானத்தில் வைத்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால், இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
47
சூர்யகுமார் யாதவ் திருப்பதி ஏழுமலையான் தரிசனம்
இதையடுத்து, 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெற்றதால், சூர்யகுமார் யாதவ் ஓரங்கட்டப்பட்டார். இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவது மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றுள்ளார். ஆனால், வரும் மார்ச் 1 ஆம் தேதி நடக்கும் போட்டியில் அவர் பங்கேற்பது என்பது கேள்விக்குறி தான்.
57
சூர்யகுமார் யாதவ் திருப்பதி ஏழுமலையான் தரிசனம்
ஏனென்றால், 6ஆவது இடத்திற்கு தான் தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் வந்துள்ளார். அவரை ஓரங்கட்டிவிட்டு அவரது இடத்தில் சூர்யகுமார் யாதவ்வை இடம் பெறச் செய்வது என்பது சாத்தியமற்றது. இந்த நிலையில், சூர்யகுமார் தனது மனைவி தேவிஷா ஷெட்டி மற்றும் தாய், தந்தை ஆகியோருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுள்ளார்.
67
சூர்யகுமார் யாதவ் திருப்பதி ஏழுமலையான் தரிசனம்
அப்போது அடுத்து நடக்க இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரு டெஸ்டுகளிலும் இடம் பெற வேண்டும் என்றும், அதிக ரன்கள் குவிக்க வேண்டும், அந்த இரு டெஸ்டுகளிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வேண்டிக் கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளார்.
77
சூர்யகுமார் யாதவ் திருப்பதி ஏழுமலையான் தரிசனம்
ஏழுமலையானை தரிசனம் செய்த பிறகு ரங்கநாயகுலா மண்டபத்தில் வேத பண்டிதர்கள் ஆசிர்வாதம் வழங்கினர். சூர்யகுமார் யாதவ்வை கண்ட ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.