அஜிங்க்யா ரஹானே
மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான 12ஆவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பந்து வீச்சு தேர்வு செய்தார்.
அஜிங்க்யா ரஹானே
அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழக்கம் போல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் உள்பட ஒவ்வொருவரும் சொதப்பவே 20 ஓவர்கல் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அஜிங்க்யா ரஹானே, ருத்துராஜ் கெய்க்வாட் இருவரும் சேர்ந்து 100 ரன்கள் எடுத்தனர்.
அஜிங்க்யா ரஹானே
ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு கடைசியில் கை கொடுக்க சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியத் தொடர்ந்து பேசிய ரஹானே கூறியிருப்பதாவது; இந்தப் போட்டியில் நான் ரசித்து ரசித்து தான் விளையாடினேன்.
அஜிங்க்யா ரஹானே
எந்த டென்ஷனும், அழுத்தமும் இல்லாமல் விளையாடுமாறு தோனி என்னிடம் கூறினார். அது போன்றே நான் விளையாடினேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான் இடம் பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு ஒரு குடும்பம் போன்று தோன்றுகிறது.
அஜிங்க்யா ரஹானே
சென்னை அணியில் தோனி எல்லோருக்கும் சுதந்திரம் கொடுத்திருக்கிறார். எனக்கே கடைசி நேரத்தில் தான் தெரிய வரும். டாஸ் போடுவதற்கு முன்பு தான் மொயின் அலிக்கு உடல் நிலை சரியில்லை என்றும், ஆதலால் நீ விளையாடுகிறாய் என்றும் பயிற்சியாளர் பிளமிங் என்னிடம் கூறினார். இந்த ஐபிஎல்லுக்கு முன்பு விளையாடி நான் நிறைய ரன்களை சேர்த்தேன்.
அஜிங்க்யா ரஹானே
முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் நிறைய பயிற்சி செய்தேன். ஐபிஎல் ஒரு நெடுந்தொடர். அதில் எப்போவாவது தான் வாய்ப்பு கிடைக்கும்.
அஜிங்க்யா ரஹானே
அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மும்பை எனது சொந்த ஊர். வான்கடே மைதானத்தில் நிறைய போட்டிகளில் நான் விளையாடி இருக்கிறேன்.
அஜிங்க்யா ரஹானே
ஆனால், இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட நான் விளையாடியது இல்லை. ஆனால், இந்தியாவுக்காக ஒரு டெஸ்ட் போட்டியிலாவது விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை என்று கூறியுள்ளார்.