கோலி, ரோஹித்துக்கு ஆப்படிக்கும் பிசிசிஐ-யின் அதிரடி முடிவு

First Published | Oct 22, 2020, 6:36 PM IST

பிசிசிஐயின் அதிரடி முடிவு, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை மட்டுமே அதிகமாக பாதிக்கும்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஐபிஎல் முடிந்த கையோடு இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செல்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக, அந்த தொடருக்கான அணிகளில் இடம்பெறும் இந்திய வீரர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு செல்லவுள்ளனர்.
Tap to resize

டிசம்பர் 3ம் தேதி முதல் ஜனவரி 17ம் தேதி வரை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.
பயிற்சி போட்டியிலும் இந்திய வீரர்கள் தங்களுக்கு உள்ளாகவே ஆடிக்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. எனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு சேர்த்து மொத்தமாக 32 வீரர்களை கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு செல்லவுள்ளது. வீரர்கள், பயிற்சியாளர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள், ஃபிசியோ என மொத்தம் ஐம்பது பேர் ஆஸ்திரேலியாவிற்கு செல்லவுள்ளனர்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியமும் இருக்கிறது. எனவே வீரர்கள், தங்களது குடும்பத்தினரை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துச்செல்ல வேண்டாம் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
ஐபிஎல்லில் ஆடும் வீரர்கள் தங்களது குடும்பத்தினரை ஐக்கிய அரபு அமீரகம் அழைத்துச்செல்ல அணி நிர்வாகங்கள் அனுமதியளித்ததை தொடர்ந்து, வீரர்கள் தங்களது மனைவி, குழந்தைகளை அமீரகம் அழைத்துச்சென்றுள்ளனர். ஆனால் பிசிசிஐ, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு குடும்பத்தினரை அழைத்துச்செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதால், வீரர்கள் தங்களது குடும்பத்தினரை இந்தியாவிற்கு திருப்பியனுப்பிவிட வேண்டும்.
ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா மற்றும் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோர் தான் பெரும்பாலும் போட்டிகளின் போது தென்படக்கூடியவர்கள். ரோஹித்தும் கோலியும் தான் பெரும்பாலும் எங்கு சென்றாலும் அழைத்துச்செல்லக்கூடியவர்களும் கூட. எனவே இது அவர்களுக்குத்தான் சற்று பாதிப்பாக இருக்கும்.

Latest Videos

click me!