#ICCWTC ஃபைனல்: அவங்க 2 பேருமே தேவையில்ல.. இந்திய அணியின் தொடக்க ஜோடியை உறுதி செய்த பிசிசிஐ

First Published Jun 16, 2021, 2:38 PM IST

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்த நிலையில், ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக யார் இறங்குவார் என்ற கேள்விக்கு விடை கிடைத்தது.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நாளை மறுநாள்(18ம் தேதி) தொடங்குகிறது. சவுத்தாம்ப்டனில் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. சமபலம் வாய்ந்த 2 மிகச்சிரந்த அணிகள் மோதுவதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.
undefined
டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணி:விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), ஹனுமா விஹாரி, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ்.
undefined
டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் 2 கேள்விகள் இருந்தது. தொடக்க ஜோடி மற்றும் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் ஆகியவை குறித்த கேள்விகள் தான் இருந்தது. ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ஷுப்மன் கில், மயன்க் அகர்வால் ஆகிய 4 தொடக்க வீரர்கள் இந்திய அணியில் இருந்ததால் ரோஹித் சர்மாவுடன் அவர்களில் யார் தொடக்க வீரராக இறங்குவார் என்பது குறித்து கேள்வி நீடித்துவந்தது. இதுகுறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.
undefined
பிசிசிஐ 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை அறிவித்த நிலையில், தொடக்க ஜோடி எது என்பது அதன்மூலம் தெளிவாகியுள்ளது. மயன்க் அகர்வால், கேஎல் ராகுல் ஆகிய இருவருக்கும் 15 வீரர்களை கொண்ட அணியில் இடம் கிடைக்கவில்லை. ரோஹித் சர்மாவும் ஷுப்மன் கில்லும் மட்டுமே அணியில் எடுக்கப்பட்டனர். எனவே அவர்கள் இருவரும் தான் தொடக்க வீரர்கள் என்பது தெளிவாகிவிட்டது.
undefined
மயன்க் அகர்வால் நியூசிலாந்துக்கு எதிராக ஆடிய அனுபவம் கொண்டவர் என்றாலும், தற்போதைய ஃபார்ம் மற்றும் கடைசியாக நடந்த ஆஸி., மற்றும் இங்கி., அணிகளுக்கு எதிரான தொடர்களில் ஆடியவர் என்ற முறையிலும் ஷுப்மன் கில்லையே டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடவைக்க இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
undefined
click me!