Babar Azam: ஆள விடுங்கடா சாமி: இரவோடு இரவாக கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பாபர் அசாம்

First Published | Oct 2, 2024, 6:16 AM IST

தனது மோசமான ஆட்டத்தால் தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக நள்ளிரவில் அறிவித்துள்ளார்.

Babar Azam

கோலியுடன் ஒப்பீடு

பேட்டிங்கில் ரன்மெஷின் விராட் கோலியின் சாதனைகளுடன் ஒப்பிட்டு பேசக்கூடிய அளவிற்கு நட்சத்திர பேட்ஸ்மேனாக ஜொலித்தவர் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம். தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்காக பல சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தினார். அவரது சிறந்த ஆட்டத்தை அங்கீகரிக்கும் விதமாக கடந்த 2019ம் ஆண்டு டி20 மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். பின்னர் அடுத்த ஆண்டான 2020ல் ஒருநாள் அணிக்கும் பாபர் அசாம் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

Babar Azam

பாபர் அசாம் பேட்ஸ்மேனாக ஜொலித்த நிலையிலும், கேப்டனாக பெரிய சாதனைகளை படைக்க தவறிவிட்டார். தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரில் இருந்து வெளியேறியது. மேலும் ஆசிய கோப்பையிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாபர் அசாம் அனைத்து தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தார்.

Tap to resize

Babar Azam

மீண்டும் கேப்டனாக பாபர்

இதனைத் தொடர்ந்து ஒருநாள், டி20 அணியின் கேப்டனாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி நியமிக்கப்பட்டார். ஷான் மசூத் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் 2024 டி20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கடந்த மார்ச் மாதம் மீண்டும் ஒருநாள், டி20 கிரிக்கெட் அணிக்கு பாபர் அசாமை கேப்டனாக அறிவித்தது. இது அந்நாட்டு ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து சூப்பர் 8 சுற்றுக்குள் கூட நுழையாமல் தொடரில் இருந்து வெளியேறியது.

Babar Azam

இரண்டாவது முறையாக விலகல்

இதனால் பாபர் அசாம் இரண்டாவது முறையும் கேப்டனாக சோபிக்கத் தவறினார். இந்நிலையில் அண்மையில் வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் தோற்று சொந் மண்ணில் மோசமான சாதனையை படைத்தது. இதனால் அந்த அணி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில் டி20, ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் மீண்டும் அறிவித்துள்ளார். 

Babar Azam

பாபரின் விளக்கம்

இது தொடர்பாக நள்ளிரவில் எக்ஸ் தள பதிவில், “பாகிஸ்தான் ஆண்கள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நான் விலகுகிறேன். இது தொடர்பாக எனது முடிவை கடந்த மாதமே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு நான் கடிதம் அனுப்பிவிட்டேன். பாகிஸ்தான் அணியை வழிநடத்துவது மிகப்பெரிய கௌரவம், ஆனால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி பேட்ஸ்மேனாக எனது பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். கேப்டன் பதவி எனக்கு பலன் அளிக்கும் அனுபவமாக இருந்தது. ஆனால் குறிப்பிடத்தக்க பணிச்சுமையை அது எனக்கு ஏற்படுத்தியது.

நான் எனது குடும்பத்துடன் சிறிது நேரம் செலவழிக்க விரும்புகிறேன். பேட்டிங் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் அதிக ஆற்றலை செலவிட நினைக்கிறேன். ரசிகர்களின் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் என் மீதான நம்பிக்கைக்கு நான் நன்றி உள்ளவனாக இருப்பேன். உங்களின் உற்சாகம் தான் எனக்கு உலகத்தையே காட்டியது. நாங்கள் அணியாக, ஒன்றாக சாதித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். மேலும் ஒரு வீரராக அணிக்கு பங்களிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
 

Babar Azam as Captain

கேப்டனாக பாபர் அசாம்
பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி மொத்தமாக 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் வெற்றியும், 6 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட் பார்மேட்டில் பாபர் தலைமையில் 43 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி 26 போட்டிகளில் வெற்றியும், 15 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதே போன்று டி20யில் பாபர் அசாம் தலைமையில் 48 வெற்றியையும், 29 தோல்வியையும் அந்த அணி பெற்றுள்ளது.

Babar Azam as a Batsman

பேட்ஸ்மேனாக பாபர் அசாம்
தனது தனித்துவமான ஆட்டத்தால் சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலித்த பாபர் அசாம், 2021, 2022ல் ஒருநாள் போட்டிகளில் ஐசிசியின் கிரிக்கெட்டர் ஆப் தி இயர், 2022ல் ஐசிசியின் கிரிக்கெட் ஆப் தி இயர், 2021 ஏப்ரல் மாதத்தில் ஐசிசி பிளேயர் ஆப்தி மந்த், 2022 மார்ச் மாதத்தில் ஐசிசி பிளேயர் ஆப் தி மந்த், 2023 ஆகஸ்ட் மாதத்தில் ஐசிசி பிளேயர் ஆப்தி மந்த் என தொடர்ந்து ஐசிசியால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

Latest Videos

click me!