IND vs AUS 4th T20: வாஷிங்டன், அக்சர் சுழ‌லில் சிக்கிய ஆஸ்திரேலியா..! இந்தியா அபார வெற்றி!

Published : Nov 06, 2025, 06:00 PM IST

IND vs AUS 4th T20: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் கலக்கிய அக்சர் படேல் அணி வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார்.

PREV
14
இந்திய அணி 167 ரன்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக துணை கேப்டன் சுப்மன் கில் 39 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்தார். அபிஷேக் சர்மா 21 பந்தில் 28 ரன் எடுத்தார்.

24
ஆஸ்திரேலியா படுதோல்வி

கடைசிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடிய அக்சர் படேல் 11 பந்தில் 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 21 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் எல்லீஸ் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகளும், ஸ்டோனிஸ், பார்லட் தலா 1 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

 பின்பு சவாலான இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 18.2 ஓவர்களில் வெறும் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

34
பேட்ஸ்மேன்கள் மோசம்

இந்திய அணியின் பாஸ்ட் மற்றும் ஸ்பின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் முடங்கி போயினர். அந்த அணி கேப்டன் மிட்ச்செல் மார்ஷ் அதிகப்பட்சமாக 30 ரன்கள் எடுத்தார். மேத்யூ ஷார்ட் 25 ரன்கள் அடித்தார். ஜோஸ் இங்லிஷ் (12), டிம் டேவிட் (14), பிலிப்ஸ் (10), ஸ்டோனிஸ் (17) என முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியாவுக்கு எதிராக விளையாடும் கிளைன் மேக்ஸ்வெல்லும் (2) நிலைக்கவில்லை.

44
அக்சர் படேல் ஆட்டநாயகன்

இந்திய அணி தரப்பில் வெறும் 8 பந்துகள் மட்டுமே வீசிய வாஷிங்டன் சுந்தர் 3 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அக்சர் படேல், ஷிவம் துபே தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, பும்ரா தலா 1 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் ஜொலித்த அக்சர் படேல் ஆட்டநாயகன் விருது வென்றார்.

தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 5வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 8ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories