ஆனாலும் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காமல் பிசிசிஐ தீங்கு இழைத்துள்ளதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஷிவம் துபே பவுலிங்கும் செய்வார் என கூறப்பட்டாலும் இந்த தொடரில் அவர் இரண்டிலும் சொதப்பி வருவதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வாய்ப்பு கிடைக்கும்பொதெல்லாம் சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சனை நீக்கி விட்டு அனுபவம்வாய்ந்த ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுப்பது ஏன் எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்திய அணி பிளேயிங் லெவன்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜிதேஷ் சர்மா, சிவம் துபே, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.