IND vs AUS: ஆஸ்திரேலிய அணியில் என்னென்ன மாற்றங்கள்..? கடைசி டெஸ்ட் போட்டிக்கான உத்தேச ஆடும் லெவன்

First Published | Mar 7, 2023, 8:57 PM IST

இந்தியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 
 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறிவிட்டது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணியும் ஃபைனலுக்கு முன்னேறிவிடும். கடைசி போட்டியில் ஜெயிக்காவிட்டாலும், இலங்கை அணி நியூசிலாந்தை 2-0 என ஒயிட்வாஷ் செய்யாவிட்டால் இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறும்.
 

இந்திய அணிக்கு இந்த போட்டி எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு ஆஸ்திரேலிய அணிக்கும் முக்கியம். 2004ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றிராத ஆஸ்திரேலிய அணி, இந்த முறை இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் வந்தது. ஆனால் முதல் 2 போட்டிகளில் தோற்றதால் தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. 3வது டெஸ்ட்டில் ஜெயித்து உத்வேகம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, கடைசி டெஸ்ட் போட்டியிலும் ஜெயித்து தொடரை சமன் செய்யும் முனைப்பில் உள்ளது. இந்த டெஸ்ட் தொடரை ஜெயிக்க முடியாவிட்டாலும், தோற்றுவிடக்கூடாது என்ற உறுதியில் உள்ளது ஆஸ்திரேலிய அணி.

IND vs AUS: வாழ்வா சாவா டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! உத்தேச ஆடும் லெவன்
 

Tap to resize

கேப்டன் பாட் கம்மின்ஸ் கடைசி டெஸ்ட்டிலும் ஆடாததால் ஸ்டீவ் ஸ்மித்தே கேப்டன்சி செய்கிறார். 3வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றதால் கடைசி டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. இந்தூர் டெஸ்ட்டில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் ஆஸ்திரேலிய அணி களமிறங்கும்.

ICC WTC ஃபைனலில் ராகுல் - கில் இருவரில் யார் ஆடலாம்? ரோஹித் & டிராவிட்டுக்கு ரிக்கி பாண்டிங் கொடுத்த செம ஐடியா

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப்,  கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், டாட் மர்ஃபி, குன்னெமன்.
 

Latest Videos

click me!