#AUSvsIND எங்களுக்கு எந்த பிரச்னையுமே இல்லடா..! இந்திய அணியின் வயிற்றில் புளியை கரைக்கும் ஆஸ்திரேலியா

First Published Nov 28, 2020, 6:45 PM IST

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டிக்கான உத்தேச ஆஸ்திரேலிய அணியை பார்ப்போம். 
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடியது. முதலில் பேட்டிங் ஆடி 374 ரன்களை குவித்து, இந்திய அணியை 308 ரன்களுக்கு சுருட்டி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.
undefined
சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் செம கெத்தாக ஆடினர். ஃபின்ச், ஸ்மித் ஆகிய இருவரும் சதமடித்தனர். வார்னர் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரும் சிறப்பாக ஆடினர். பவுலிங்கில் ஹேசில்வுட் மிரட்டலாக வீசி ஆரம்பத்திலேயே இந்திய அணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அசத்திய ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
undefined
நாளை நடக்கவிருக்கும் 2வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் உள்ள ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை; அதற்கான அவசியமும் இல்லை. எனவே கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவனுடன் தான் 2வது போட்டியிலும் களமிறங்கும்.
undefined
உத்தேச ஆஸ்திரேலிய அணி:டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், ஆடம் ஸாம்பா.
undefined
click me!