#AUSvsIND 2வது ஒருநாள்: என்ன ஆனாலும் சரி இதுதான் டீம்..! இந்திய அணி அதிரடி

First Published Nov 28, 2020, 6:04 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடியது. முதலில் பேட்டிங் ஆடி 374 ரன்களை குவித்து, இந்திய அணியை 308 ரன்களுக்கு சுருட்டி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.
undefined
அந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர்கள் பும்ரா, சைனி, சாஹல் ஆகிய அனைவரின் பவுலிங்கையும் ஆஸ்திரேலிய வீரர்கள் அடித்து நொறுக்கினர். ஷமி மட்டுமே ஓரளவிற்கு கட்டுக்கோப்பாக வீசி ரன்களை கட்டுப்படுத்தினார்.
undefined
பேட்டிங்கை பொறுத்தமட்டில் தவானும் ஹர்திக் பாண்டியாவும் மட்டுமே நன்றாக ஆடினர். கோலி, மயன்க் அகர்வால், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகிய நால்வரும் ஏமாற்றமளித்தனர். முதல் போட்டியில் தோற்றதால் 2வது போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இருக்கும் இந்திய அணி, ஏதேனும் மாற்றம் செய்தால் அது பவுலிங் யூனிட்டில் தான் செய்யப்படும். ஆனால் 2வது போட்டியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. முதல் போட்டியில் களமிறங்கிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.
undefined
உத்தேச இந்திய அணி:ஷிகர் தவான், மயன்க் அகர்வால், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, சாஹல், ஷமி, சைனி, பும்ரா.
undefined
click me!