3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி நாளை சிட்னியில் நடக்கிறது.
சமபலம் வாய்ந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி என்பதால் போட்டி கடுமையாக இருக்கும். இந்திய அணி வலுவாக உள்ளது. அதேவேளையில், சொந்த மண்ணில் இந்திய அணி மீது ஆதிக்கம் செலுத்தி கெத்தாக தொடரை வெல்லும் முனைப்பில் உள்ள ஆஸ்திரேலிய அணியும் சளைத்தது அல்ல. முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் உத்தேச ஆஸ்திரேலிய அணியை பார்ப்போம்.
தொடக்க வீரர்கள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் மற்றும் வார்னர். 3ம் வரிசையில் ஸ்மித், 4ம் வரிசையில் லபுஷேன், மிடில் ஆர்டரில் மேக்ஸ்வெல் மற்றும் ஐபிஎல்லில் அசத்திய மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் ஆடுவார்கள். வார்னர், ஃபின்ச், ஸ்மித், லபுஷேன், ஸ்டோய்னிஸ், கம்மின்ஸ், ஸ்டார்க் என அனைவருமே செம ஃபார்மில் உள்ள வீரர்கள். மேக்ஸ்வெல் ஐபிஎல்லில் சரியாக ஆடாவிட்டாலும், ஆஸ்திரேலியாவில் நடந்த கடைசி தொடரில் மிகச்சிறப்பாக ஆடி சதமடித்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். அலெக்ஸ் கேரியும் அப்படித்தான். எனவே ஆஸ்திரேலிய அணி மிக வலுவாக உள்ளது. அதுவும் சொந்த மண்ணில் ஆடுவது அந்த அணிக்கு கூடுதல் பலம்.
விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி. ஃபாஸ்ட் பவுலர்கள் கம்மின்ஸ், ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட்டும், ஸ்பின்னராக ரிஸ்ட் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பா அல்லது அஷ்டன் அகர் ஆகிய இருவரில் ஒருவர் ஆடுவார்.
முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச ஆஸ்திரேலிய அணி:ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், க்ளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், ஆடம் ஸாம்பாஅஷ்டன் அகர்.