ஆசிய கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் பைனல் ரத்தானால் யாருக்கு கோப்பை? ரிசர்வ் டே உண்டா?

Published : Sep 28, 2025, 05:00 PM IST

இந்தியா, பாகிஸ்தான் மோதும் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி ரத்தானால் கோப்பை யாருக்கு கிடைக்கும்? ரிசர்வ் டே எனப்படும் மாற்று நாள் உண்டா? என்பது குறித்து பார்ப்போம்.

PREV
14
Asia Cup Final: India-Pakistan

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதன் முறையாக இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று இரவு இறுதிப்போட்டியில் மோதுகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். 

இந்த தொடரில் இந்தியா ஏற்கெனவே இரண்டு முறை பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளதால் பைனலிலும் நமது அணியின் ஆதிக்கமே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

24
பைனல் ரத்தானால் கோப்பை யாருக்கு?

இன்றைய இறுதிப்போட்டி மழை காரணமாவோ அல்லது வேறு ஏதும் காரணமாகவோ ரத்து செய்யப்பட்டால் கோப்பை யாருக்கு கிடைக்கும்? ரிசர்வ் டே (மாற்று நாள்) ஏதும் உண்டா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) விதிகளின்படி, வானிலை அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் இறுதிப் போட்டி 'முடிவு இல்லை' (No-Result) என்று அறிவிக்கப்பட்டால், கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். அதே வேளையில் இன்று (செப்டம்பர் 28) போட்டி ரத்தானால் நாளை (செப்டம்பர் 29) ரிசர்வ் டே நாளில் போட்டி நடக்கும்.

34
மழை வர வாய்ப்புள்ளதா?

ஆசியக் கோப்பையின் வரலாற்றில் இதுவரை இரண்டு அணிகள் கோப்பையைப் பகிர்ந்ததில்லை. ஆனால் இன்றைய இறுதிப் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட வாய்ப்பே இல்லை. ஏனெனில் அக்யூவெதர் (AccuWeather) தகவலின்படி, வெயிலுக்கு பெயர் போன துபாயில் இன்று வெப்ப நிலை 42 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். மழை வருவதற்கான வாய்ப்பே இல்லை. ஆகவே ரசிகர்களுக்கு போட்டி ரத்தாகும் என்ற கவலையே வேண்டாம்.

44
அபிஷேக் சர்மா ஸ்டார் வீரர்

இறுதிப் போட்டியில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா முக்கிய வீரராக இருப்பார். ஏனெனில் அவர் இந்தத் தொடரில் 6 போட்டிகளில் 204.64 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 309 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அபிஷேக் சர்மா மூன்று அரை சதங்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது. பவுலிங்கில் குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி நல்ல பார்மில் உள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories