ஆசிய கோப்பை பரிசுத்தொகை 2 மடங்கு உயர்வு..! கோப்பை வெல்லும் அணிக்கு எவ்வளவு கிடைக்கும்?

Published : Sep 09, 2025, 03:13 PM IST

ஆசிய கோப்பை இன்று தொடங்க உள்ள நிலையில், இந்த தொடரின் பரிசுத்தொகை எவ்வளவு? என்பது குறித்து பார்ப்போம்.

PREV
14
ஆசிய கோப்பை கிரிக்கெட் 2025

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் ஆகிய 8 அணிகள் விளையாடும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. டி20 போட்டி வடிவத்தில் நடைபெறும் இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் நாளை ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது.

24
ஆசிய கோப்பை பரிசுத்தொகை

இந்த தொடரில் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை தொடரின் பரிசுத்தொகையை பொறுத்தவரை கோப்பையை வெல்லும் அணிக்கு ₹2.6 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். இரண்டாம் பிடிக்கும் அணிக்கு ₹1.3 கோடி பரிசுத்தொகை கிடைக்கும். ஆசிய கோப்பையில் தொடர் நாயகன் விருது வெல்பவர்களுக்கு ₹12.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

2023ல் இந்தியா பெற்ற பரிசுத்தொகை என்ன?

2023 ஆம் ஆண்டு ஓடிஐ வடிவத்தில் நடந்த ஆசியக் கோப்பையில் இலங்கையை வீழ்த்திய இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியா ₹1.25 கோடி பரிசு பெற்றது. இப்போது 2025 ஆசிய கோப்பையில் ₹2.6 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பரிசுத்தொகை இரண்டு மடங்காகியுள்ளது.

34
ஆசிய கோப்பை தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்?

ஆசிய கோப்பை தொடர் முழுவதையும் சோனி நெட்வொர்க் சேனலில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் தமிழ் வர்ணனையுடன் போட்டிகளை பார்த்து மகிழலாம். இது மட்டுமின்றி சோனி லிவ் ஓடிடி தளத்திலும் போட்டிகளை நேரலையில் பார்க்கலாம். ஆசியக் கோப்பையில் அனைத்து போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 8.00 மணிக்குத் தொடங்கும். செப்டம்பர் 15 அன்று ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான போட்டி மட்டும் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

44
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி

ஆசிய கோப்பையில் விளையாடும் இந்திய அணி வீரர்கள்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் ரிங்கு சிங்.

ரிசர்வ் வீரர்கள் பட்டியல்: பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

Read more Photos on
click me!

Recommended Stories