ஆசியக்கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்மன் கில் துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியில் அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெற்றனர். பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆக்யோர் ரிசர்ச் வீரர்கள் பட்டியலில் உள்ளனர்.
இந்திய அணி பிளேயிங் லெவன் என்ன?
இந்திய அணியின் பிளேயிங் லெவனை பொறுத்தவரை சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்க உள்ளனர், திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய உள்ளனர். இதன்பிறகு ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்ட்யா பின்வரிசையில் அதிரடியாக ஆட ரெடியாக உள்ளனர்.