நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஏற்கெனவே 2 முறை மோதியுள்ளன. இந்த இரண்டிலும் பாகிஸ்தானை இந்தியா பந்தாடி அபார வெற்றி பெற்றுள்ளது. ஆகையால் பைனலிலும் இந்திய அணியின் ஆதிக்கமே முழுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் பாகிஸ்தான் அணி எந்த நேரத்தில் எப்படி விளையாடும் என்பதை கணிக்க முடியாது.
பைனல்களில் பாகிஸ்தான் கை ஓங்கியுள்ளது
ஒட்டுமொத்தமாக டி20, ஓடிஐ, டெஸ்ட் என அனைத்து வடிவ பார்மட்டிலும் இரு அணிகளூம் மோதிய போட்டிகளில் இந்தியாவே அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. ஆனால் பைனல் என்று வரும்போது பாகிஸ்தானின் கை சற்று ஓங்கியுள்ளது.
5க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் இறுதிப் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை ஐந்து முறை மோதியுள்ளன. இதில், இந்தியா 2 முறையும், பாகிஸ்தான் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.