முன்னணி பேட்ஸ்மேன்கள் ஏமாற்றிய நிலையில், 23 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த முகமது ஹாரிஸ் பாகிஸ்தானின் அதிகப்பட்ச ஸ்கோர் எடுத்தார். முகமது நவாஸ் 15 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். ஷஹீன் அப்ரிடியும் கேப்டன் சல்மான் ஆகாவும் தலா 19 ரன்கள் எடுத்தனர். வங்கதேசத்திற்காக தஸ்கின் அகமது மூன்று விக்கெட்டுகளையும், மெஹ்தி ஹசன் மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தடுமாறிய வங்கதேசம்
பின்பு எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாறியது. தொடக்க வீரர் பர்வேஸ் ஹொசைன் எமோன், ஷகின் அப்ரிடி பந்தில் டக் அவுட் ஆனார். இதன்பின்பு டோஹித் ஹிரிதோயயும் (5) ஷகின் அப்ரிடி காலி செய்தார். தொடர்ந்து ஓரளவு சிறப்பாக ஆடிய சைஃப் ஹாசன் (15 பந்தில் 18), மஹேதி ஹசன் (11) என வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அந்த அணி 44/4 என பரிதவித்தது.