ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக பெற்ற வெற்றியை ராணுவ படைக்கு சமர்பிப்பதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் நிற்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கவோ அல்லது நட்பு பாராட்டவோ முன்வராமல், இந்திய வீரர்கள் விலகியே இருந்தனர். டாஸுக்குப் பிறகு வழக்கமான கைகுலுக்கலைத் தவிர்த்த இரு அணி கேப்டன்களும் போட்டி முடிந்த பின்னரும் வழக்கமான கைகுலுக்கலுக்கு முன்வரவில்லை.
25
இரு அணி வீரர்களும் கைகுலுக்கவில்லை
பாகிஸ்தான் நிர்ணயித்த 128 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பேட் செய்த இந்தியாவை, கேப்டன் சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடித்து வெற்றி பெற வைத்தார். வெற்றிக்கு பின்பு சக வீரர் ஷிவம் துபேவுடன் கைகுலுக்கிய சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் வீரர்களைப் புறக்கணித்து டிரஸ்ஸிங் அறைக்குத் திரும்பினர். பாகிஸ்தான் வீரர்கள் யாரும் இந்திய வீரர்களை அணுகி வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கவோ அல்லது கைகுலுக்கவோ முன்வரவில்லை.
35
டிரெஸ்ஸிங் ரூம் ஜன்னலை சாத்திய இந்திய வீரர்கள்
போட்டிக்குப் பிறகு இரு அணிகளின் வீரர்களும் வழக்கமாகச் செய்யும் கைகுலுக்கல் நடைபெறவில்லை. இந்தியா வெற்றி பெற்ற பிறகு, இந்திய வீரர்கள் யாரும் டிரஸ்ஸிங் அறையிலிருந்து வெளியே வந்து பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கத் தயாராக இல்லை. இந்திய வீரர்கள் வெளியே வருவார்கள் என்று எதிர்பார்த்து பாகிஸ்தான் வீரர்கள் சிறிது நேரம் மைதானத்தில் நின்று இந்திய டிரஸ்ஸிங் அறையைப் பார்த்தனர். ஆனால், டிரஸ்ஸிங் அறையின் ஜன்னல்கள் மூடப்பட்டிருப்பதைக் கண்டு அவர்கள் திரும்பிச் சென்றனர்.
ராணுவத்துக்கு வெற்றியை சமர்பித்த சூர்யகுமார் யாதவ்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் எல்லை மோதல்கள் காரணமாக, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்த நிலையில், இன்றைய போட்டி நடைபெற்றது. இந்த வெற்றியை ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு சமர்பிப்பதாக போட்டிக்கு பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
55
உருக்கமாக பேசிய சூர்யகுமார்
''பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் நிற்கிறோம். எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். இன்றைய வெற்றியை நமது பாதுகாப்பு படையினருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறோம்'' என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு வழக்கமாக வருகை தரும் பிரபலங்கள் அல்லது பிசிசிஐ உயர் அதிகாரிகள் யாரும் இன்றைய போட்டிக்கு மைதானத்திற்கு வரவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று கோரி நாடு முழுவதும் போராட்டங்களும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.