ஐபிஎல், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இரண்டு வெளிநாட்டு டி20 லீக்குகளில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. பிக் பாஷ் லீக்கில் அவர் எந்த அணிக்கு விளையாடுவார்? என்பது குறித்து பார்ப்போம்.
சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல்-லில் இருந்து ஓய்வு பெற்ற ஆஃப்-ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின், தற்போது இரண்டு வெளிநாட்டு டி20 லீக்குகளில் விளையாட உள்ளார். பிக் பாஷ் லீக் மற்றும் இன்டர்நேஷனல் லீக் டி20-ல் விளையாட அவருக்கு வாய்ப்புகள் வந்துள்ளன. இரண்டு லீக்குகளும் வெவ்வேறு நேரங்களில் நடப்பதால், இரண்டிலும் அவர் பங்கேற்பார்.
26
பிக் பாஷ் லீக்கில் முதல் இந்திய வீரர்
பிசிசிஐ விதிகளின்படி, இந்திய கிரிக்கெட்டில் உறுப்பினராக இருக்கும் எந்த வீரரும் வெளிநாட்டு டி20 லீக்குகளில் விளையாட முடியாது. இதனால் தான் அஸ்வின் விளையாடவில்லை. தற்போது ஓய்வு பெற்றதால், பிக் பாஷ் லீக்கில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற உள்ளார்.
36
அஸ்வின் தேர்வு செய்யும் அணி எது?
பிக் பாஷ் லீக்கில் சிட்னி சிக்சர்ஸ், சிட்னி தண்டர், ஹோபார்ட் ஹரிகேன்ஸ் மற்றும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் போன்ற பல அணிகளிடமிருந்து அஸ்வினுக்கு அழைப்பு வந்துள்ளது. அவர் எந்த அணியைத் தேர்வு செய்வார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
ஐபிஎல் ஓய்வுக்குப் பிறகு, இன்டர்நேஷனல் லீக் டி20 லீக் அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும் ஏலத்தில் அவர் பெயர் இடம்பெறும். ஏலத்தில் அவரை எடுக்கும் அணிக்காக விளையாடுவார். அதே சமயம் பிக் பாஷ் லீக்கிலும் பங்கேற்பார்.
56
அஸ்வினுக்கு அடுத்தடுத்த போட்டிகள்
இன்டர்நேஷனல் லீக் டி20 டிசம்பர் 2-ல் தொடங்கி ஜனவரி 4 வரை நடக்கிறது. பிக் பாஷ் லீக் டிசம்பர் 14-ல் தொடங்கி ஜனவரி 25 வரை நடைபெறும். இதனால், ILT20-ல் விளையாடிய பிறகு அஸ்வின் ஆஸ்திரேலியா செல்வார். அவரால் பிக் பாஷ் லீக்கின் தொடக்கத்தில் பங்கேற்க முடியாது.
66
ரெடியாகும் அஸ்வின்
'ஏலத்திற்கு எனது பெயரை பதிவு செய்துள்ளேன். ஆறு அணிகளில் ஒன்று என்னை தேர்வு செய்யும் என நம்புகிறேன்' என அஸ்வின் கூறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் இந்த லீக்கின் நான்காவது சீசன் இது. ஏலத்தின் மூலமே அஸ்வினை அணிகள் எடுக்க முடியும்.