IND vs SA: ஐபிஎல்லில் அசத்திய 3 வீரர்களுக்கு இந்திய டி20 அணியில் இடம்! 2 அன்கேப்டு வீரர்கள், ஒரு சீனியர் வீரர்

First Published May 21, 2022, 7:55 PM IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் ஐபிஎல்லில் அசத்திய சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் முடிந்ததும் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு வந்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ஜூன் 9 முதல் 19 வரை இந்த தொடர் நடக்கவுள்ளது. 
 

இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், பும்ரா ஆகிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெறுவதால், சீனியர் வீரர்களான அவர்களுக்கு ஓய்வு தேவை என்பதால் ஓய்வு அளிக்கப்படவுள்ளது.
 

அதனால் தென்னாப்பிரிக்க தொடரில் கேஎல் ராகுல் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளது. அவருக்கும் ஓய்வளிக்கப்படும் பட்சத்தில், ஹர்திக் பாண்டியா அல்லது ஷிகர் தவான் செயல்படுவார் என்று தெரிகிறது. சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படுவதால், ஐபிஎல்லில் அசத்திய இளம் வீரர்கள் சிலருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசி அனைவரையும் கவர்ந்த இளம் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு இடம் கிடைக்கும் என்று தெரிகிறது. ஐபிஎல் 15வது சீசனில் 157 கிமீ வேகத்தில் அதிவேக பந்தை வீசிய உம்ரான் மாலிக் மற்றும் லக்னோ அணியின் ஃபாஸ்ட் பவுலர் மோசின் கான் ஆகிய இருவரும் இந்திய அணியில் இடம்பெறவுள்ளதாக தெரிகிறது.

ஐபிஎல் 15வது சீசனில் உம்ரான் மாலிக் 13 போட்டிகளில் 21 விக்கெட்டுகளையும், மோசின் கான் 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இருவரும் இந்த சீசனில் அபாரமாக பந்துவீசினர். அதன்விளைவாக அன்கேப்டு வீரர்களான இவர்கள் இருவருக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று தெரிகிறது.
 

ரிஷப் பண்ட் இல்லாததால் சீனியர் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் சேர்க்கப்படலாம் என்று தகவல்வெளியாகியுள்ளது. தினேஷ் கார்த்திக் இந்த ஐபிஎல்லில் ஆர்சிபி அணியின் ஃபினிஷிங் ரோலை வெற்றிகரமாக செய்துவருகிறார். 14 போட்டிகளில் 191.33 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடி 287 ரன்களை குவித்துள்ளார்.
 

click me!