விதியைத் தவிர்க்க முடியாது என்பது உண்மைதான். ஆனாலும் எல்லாவற்றையும் விதியுடன் இணைக்க முடியாது. சில நேரங்களில் நாம் செய்யும் தவறுகளும், நம்மைச் சுற்றியிருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் தான் நமக்கு துரதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். உங்கள் வாழ்க்கையிலிருந்து எதிர்மறை ஆற்றலைத் தடுக்க பின்வரும் பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றை செய்யுங்கள்.
உடைந்த கண்ணாடிகளை தூக்கி எறியுங்கள்
வாஸ்து பார்வையில், உங்கள் உடல் தோற்றம், உங்கள் செயல்கள், எண்ணங்கள், கனவுகள் மற்றும் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் திறனை கண்ணாடி கொண்டுள்ளது. ஆகவே கண்ணாடி உடைந்தால், நம் எண்ணங்கள், செயல்கள் அனைத்தும் உடைந்து விடும் என நம்பப்படுகிறது. வீட்டில்/ அலுவலகத்தில் கண்ணாடி உடைந்தால் அது மிகவும் மோசமானது. உங்களுக்கு வரும் துரதிர்ஷ்டத்தைத் தடுக்க உடைந்த கண்ணாடி அல்லது கண்ணாடி சில்லுகளை உடனடியாக அப்புறப்படுத்துங்கள்.
உப்பு பரிகாரம்
உப்பின் ஆற்றல் பற்றி எல்லோருக்கும் தெரியும். இதனை வீட்டில் சமையலுக்கு பயன்படுத்துவார்கள். ஆனால் இதில் ஆன்மீக சக்தி உள்ளது தெரியுமா? வீட்டில் சரியாக உப்பை வைக்காவிட்டால் குடும்பத்தில் சண்டையை உண்டாக்கும். துரதிர்ஷ்டத்திலிருந்து விடுபட முதலில் உப்பை சரியாக பயன்படுத்த வேண்டும். வாஸ்துவில் உப்பின் பயன்பாடு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது வீட்டின் எதிர்மறை சக்தியை நீக்குகிறது. எப்போதும் வீட்டில் சுத்தம் செய்யும் தண்ணீரில் கொஞ்சம் கல் உப்பு போட்டு துடைக்கவும். இன்னொரு விஷயம் என்னவெனில், வீட்டின் எல்லா மூலைகளிலும் உப்புக் கிண்ணங்களை வைப்பது. இது நேர்மறை ஆற்றலை ஈர்க்கும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை உப்பு பயன்படுத்த வேண்டாம்.
தூபங்கள்
வீட்டில் ஊதுவத்தி ஏற்றுவது சாம்பிராணி தூபம் காட்டுவது பாரம்பரிய வழக்கம். இது இந்துக்கள் மட்டுமின்றி பிற மதத்தினராலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. வீட்டில் தூபம் அல்லது வாசனை மெழுகுவர்த்திகளை வைப்பதன் நன்மைகள் ஏராளம். இது நீங்கள் வேலை செய்யும் அல்லது வசிக்கும் இடத்திலிருந்து எதிர்மறை அதிர்வுகளை நீக்குகிறது.