ஜோதிடத்தில் சுக்கிரனின் ராசி மாற்றம் முக்கியமாக கருதப்படுகிறது. ரிஷபம், துலாம் ஆகிய ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரன் கிரகத்தின் சுப தாக்கம் கொண்ட ஒருவரின் வாழ்க்கையில், அவரது உடல் நிலை சீராக இருக்கும். அத்துடன் அந்த நபருக்கு மகிழ்ச்சி, பெருமை, புகழ் ஆகியவையும் கிடைக்கும். அதை போல, வெள்ளி கிரகம் நம் வாழ்வில் செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி, ஈர்ப்பு, அன்பு (காதல்) ஆகியவற்றை குறிக்கிறது.