ரிஷபம்:
முக்கியமான பெரிய நபருடனான சந்திப்பின் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். குடும்ப விவகாரத்தில் வெளிநபரை தலையிட அனுமதிக்க வேண்டாம். அது பிரச்னையை பெரிதாக்கும். வீட்டு பிரச்னையை வீட்டுக்குள்ளேயே முடிப்பது நல்லது. அனைத்து வேலைகளையும் முறையாக வரிசையாக முடிப்பீர்கள். நிலுவையில் இருந்துவந்த பணத்தை பெறுவீர்கள். கடன் கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கும்.