பணக்கஷ்டம், வாழ்க்கையில் அடிமேல் அடி விழுதா? வீட்டு கிழக்கு திசைல இத வச்சிருக்கீங்களா பாருங்க!

First Published | Mar 25, 2023, 11:56 AM IST

வீட்டின் கிழக்கு திசையில் சில பொருள்களை வைப்பதால் தரித்தரம் பிடிக்கும். நல்ல காரியங்களே செய்ய முடியாது. 
 

நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வளர்ச்சிக்கு சரியான விஷயங்களை செய்ய வேண்டும்.   சமூகத்தில் நல்ல அந்தஸ்து வைத்திருப்பது, நான்கு நல்ல மனிதர்களை தெரிந்து வைத்திருப்பதும் முக்கியம். இது சிலருக்கு கடினமாக இருக்கலாம். சரியான உறவுகளை ஏற்படுத்தி கொள்ளாமல் சூழ்ச்சி நிறைந்தவர்களையும், வஞ்சம் நிறைந்தவர்களையும் நம்பி ஏமார்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் தவறான மனிதர்கள் சகவாசத்தினால் கெட்டவர்களும் உண்டு. இதில் வாஸ்துவிற்கும் பங்குண்டு. வாஸ்துவின் 16 மண்டலங்களில், கிழக்கு மண்டலம் சமூக இணைப்போடு தொடர்புடையது. .

இந்த கிழக்கு மண்டலம் ஏதேனும் ஒரு காரணத்தால் தொந்தரவு அடைந்தால், உங்கள் வாழ்க்கையில் சரியான நபர்களை பெற முடியாது. கிழக்கு மண்டலம் பலவீனமாக இருந்தால் சமூகத்தில் சரியான நன்மதிப்பும் தொடர்பும் இல்லாமல் போகும். இதை எப்படி சரி செய்வது என்பதை இங்கு காணலாம். 

Tap to resize

கிழக்கு வாஸ்து :

•கிழக்கில் கழிப்பறை அல்லது குப்பைத் தொட்டியை வைக்கக் கூடாது. 
•மஞ்சள் அல்லது சாம்பல் நிறத்தை இந்த திசையில் கிழக்கு திசையில் தவிர்க்கவும்
•பல உலோகங்கள் அல்லது வட்ட வடிவ அலங்கார பொருள்களை வைப்பதைத் தவிர்க்கவும்
•கிழக்கு திசையில் ஸ்டோர்ரூம் உருவாக்குவதை தவிர்க்கவும்
•கிழக்கு திசையில் பரந்த பச்சை இலைத் தாவரங்களை வைக்கலாம். 
• நீங்கள் சரியான வகையான நபர்களுடன் இணைவதற்கு உதவ, சமூக பிணைப்பைக் குறிக்கும் ஓவியத்தை கிழக்கில் வைக்கலாம்.  

கிழக்கு திசை சிறப்புகள் 

வாஸ்து சாஸ்திரத்தின்படி பார்த்தால் வீட்டினுடைய கிழக்கு திசை, ராஜ யோகம் உள்ள திசையாகும். ஏனெனில் திசைகளுக்கெல்லாம் ராஜா 'கிழக்கு திசை' தான். இந்த திசை பலவீனமாக இருந்தால் சமூக அந்தஸ்து குறைந்து, வீட்டில் பிரச்சனைகளும் வரும். கிழக்கு திசை காலியாக வைக்கப்பட வேண்டும். தீபம் வைத்தால் இன்னும் மங்களம். 

இதையும் படிங்க: மகா அஷ்டமியில் உருவாகும் ராஜயோகம்.. இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம்... திடீர் பணம் யாருக்கு?

நிதி சிக்கல் 

இந்த திசையில் தான் சூரிய பகவானும், இந்திரனும் குடியிருப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது. வீட்டில் லட்சுமி கடாட்சம் பொங்க வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும். அதே சமயம் இந்த கிழக்கு திசை ஒருபோதும் குப்பையாக இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். விநாயகர், லட்சுமி தேவி இருவரையும் இந்தத் திசையில் வைத்து வழிபட்டால் நிதி சிக்கல் தீரும். 

இதையும் படிங்க: இறைவனுக்கு விரதம் இருக்கும்போது பூண்டு, வெங்காயம் சாப்பிடக் கூடாது.. இது அறிவியல் உண்மை தெரியுமா?

Latest Videos

click me!