திருமாலுடைய அவதாரங்களில் அதிகம் புகழப்படுவது ஸ்ரீ ராம அவதாரம். ஏனென்றால் இதுவே, கடவுள் திருமால், ஆறறிவு கொண்ட மனிதராக வந்து, ஒழுக்க நெறிகளை முறையாக வாழ்ந்து காட்டின அவதாரம். பாசம், பக்தி, வீரம், அறம், தோழமை, சகோதரத்துவம், பெற்றோரை மதித்தல் என எல்லாவற்றிற்கும் ராமனே எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அப்பேர்ப்பட்ட ராம பிரானாக திருமால் அவதரித்த தினம் தான் ஸ்ரீ ராமநவமி எனப்படுகிறது.