வாஸ்துசாஸ்திரத்தின்படி, வீட்டில் வைக்கப்படும் துடைப்பம் மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. ஆகவே வீட்டை சுத்தம் செய்துவிட்டு துடைப்பத்தை வைக்கும் போது சில விஷயங்களை தவறாமல் கடைபிடித்தால், வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் எப்போதும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். மகாலட்சுமி செல்வத்தின் கடவுள். ஆகவே துடைப்பத்தை சரியான திசையில் வைத்திருப்பதன் மூலம், மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவை உங்களுக்கு கிடைக்கும்.
துடைப்பம் வைக்கும் திசை
வாஸ்துவின்படி துடைப்பத்தை ஒருபோதும் சில திசையில் வைக்கக்கூடாது. வீட்டின் வடகிழக்கு திசையில், அதாவது ஈசான மூலையில் வைக்கவேகூடாது. ஏனெனில் இது தான் தெய்வங்கள் வீற்றிருக்கும் திசையாகக் கருதப்படுகிறது. எனவே இந்த திசையில் துடைப்பம் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. துடைப்பத்தை தவறான திசையில் வைத்திருப்பதால் நிதி இழப்பு ஏற்படும். துடைப்பத்தை வீட்டின் தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் வைக்கலாம். இதனால் நல்ல பலன்கள் கிடைக்கும்.