சென்னையில் திருப்பதி தேவஸ்தானம் கட்டிய பத்மாவதி தாயார் கோயில்.. நாளை பிரம்மாண்ட கும்பாபிஷேகம்..!

First Published Mar 16, 2023, 3:14 PM IST

சென்னையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கட்டியுள்ள பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம் நாளை (மார்ச் 17) காலை நடைபெறவுள்ளது. 

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இந்தியாவிலே முதல் முதலாக சென்னையில் தான் பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த கோயிலில், இன்று காலை பத்மாவதி தாயார் திருவுருவ சிலை பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோயில் சென்னை மக்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பாகும்.  

கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக பல தடைகளை கடந்து, இப்போது தான் பத்மாவதி தாயார் கோயில் சென்னையில் வசீகரமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இந்த கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் நாளை காலை 7.30 மணி முதல் 7.44 மணிக்குள்ளாக செய்யப்படவுள்ளது. 

இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் பங்கேற்கவுள்ளார். அவருடன் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்.வி. சுபா ரெட்டி, எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் ஏ.வி. தர்மா ரெட்டி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2021ஆம் ஆண்டு பிப்.13ஆம் தேதியில் கோயில் பணிகளை தொடங்கியது. தற்போது தான் முழுமையாக முடித்துள்ளது.

கிட்டத்தட்ட ரூ.10 கோடி செலவாகியுள்ளது. இந்தக் கோயிலில் மார்ச் மாதம் 17-ம் தேதி விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 

கும்பாபிஷேக விவரம்... 

நாளை காலை 7.30 மணிக்கு தொடங்கி 7.44 மணிக்குள் கும்பாபிஷேகம். இதில் மக்களே தரிசனம் செய்ய அனுமதி உள்ளது. கும்பாபிஷேகம் நிறைவடைந்த பிறகு, காலை 10 மணி முதல் 11 மணி வரை திருக்கல்யாணம் நடைபெறும்.  சுவாமி தரிசனத்துக்கு பொதுமக்களுக்கும் அனுமதி உண்டு. 

இதையும் படிங்க: கையில காசு நிக்காம வரவுக்கு மிஞ்சிய செலவு வருதா? வீட்டுல இந்த விஷயத்தை கவனிங்க.. பணம் தங்க 3 வாஸ்து டிப்ஸ்!

இன்றும் நாளையும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் தரிசனம் செய்ய வரும் எல்லா பக்தர்களுக்கும் அன்னதானம் கொடுக்கப்படும்.

அதுமட்டுமல்ல.. பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். தற்போதைய நிலவரப்படி, இலவச தரிசன முறைதான் பின்பற்றப்படவுள்ளது. 

இதையும் படிங்க: தேனியில் ஆச்சர்யம்.. 5 தலை நாகம் பாதுகாக்கும் சிவன் கோயில்.. இங்க எவ்வளவு விசேஷம் தெரியுமா?

click me!