கையில காசு நிக்காம வரவுக்கு மிஞ்சிய செலவு வருதா? வீட்டுல இந்த விஷயத்தை கவனிங்க.. பணம் தங்க 3 வாஸ்து டிப்ஸ்!

First Published | Mar 16, 2023, 9:46 AM IST

வீட்டில் வரும் தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்த வாஸ்து சாஸ்திரத்தின்படி என்னென்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

என்னதான் கஷ்டப்பட்டு வேலை செய்தாலும், கை நிறைய சம்பளம் வாங்கினாலும் சேமிக்கவே முடியவில்லை என வருத்தம் உள்ளதா? கையில் பணம் நிற்காமல் கரைகிறதா? அப்படியானால் உங்களுடைய வீட்டில் வாஸ்துபடி சில பிரச்சனைகள் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. அதனால் தான் தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கின்றன. அதற்கு என்ன செய்ய வேண்டும்? எளிய முறையில் வீட்டு செலவுகளை குறைப்பதை இங்கு காணலாம். 

தெற்கு மற்றும் தென்மேற்கு இடையே இருக்கும் மண்டலம் தெற்கு-தென்மேற்கு மண்டலம் (SSW) என அழைக்கப்படுகிறது. உங்கள் வாழ்விலிருந்து எல்லா தேவையில்லாத செலவுகளையும் நீக்குவதில் இந்த மண்டலம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற மண்டலங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்த மண்டலத்தின் ஆற்றல் அதிகமாக இருக்கும். அதனால் இந்த மண்டலம் பலவீனமாக இருந்தால் தேவையற்ற செலவு அல்லது வீட்டுக்கு தரித்திரம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

Tap to resize

உங்களுடைய வாழ்க்கையில் தேவையில்லாத செலவுகளால் இருப்பதாக நீங்கள் நினைத்தால் வீடு அல்லது அலுவலகத்தின் இந்த தெற்கு-தென்மேற்கு மண்டலம் பகுதியை கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும். மற்ற மண்டலங்களுடன் ஒப்பிடும்போது உங்கள் கட்டிடத்தில் இந்த மண்டலம் நீட்டிக்கப்படவோ குறைக்கப்படவோ கூடாது. தெற்கு-தென்மேற்கு மண்டலம் சீரான நிலையில் இருக்க வேண்டும். 

இந்த மண்டலம் நீட்டிக்கப்பட்டால், வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தைச் சேர்ப்பது ஓரளவு நிலைமையை வாஸ்துபடி சமன் செய்யும். ஆனால் இந்த மண்டலத்தில் சிவப்பு, பச்சை நிறங்களை பூசுவது ஒரு பெரிய ஏற்றத்தாழ்வை உருவாக்கி செலவுகளை அதிகரிக்கும். தெற்கு-தென்மேற்கு திசையில் சிவப்பு அல்லது பச்சை செடிகள், தரைவிரிப்பு, திரைச்சீலைகள் ஆகிய பொருட்களை வைக்கவே கூடாது. 

இதையும் படிங்க: தரித்திரம் பிடிச்ச இந்த பொருட்களை, வீட்டுல இருந்து உடனே தூக்கி போடுங்க.. மொத்த பீடை ஒழிந்து செல்வம் பெருகும்

தெற்கு-தென்மேற்கு மண்டலம் பணத்தை வைத்து புழங்க ஏற்ற இடமல்ல. உங்கள் லாக்கரையோ அல்லது மேசையோ இங்கே வைக்காதீர்கள். மஞ்சள் நிறம் குப்பைத் தொட்டி, அல்லது பானையை தரையில் வைக்கலாம். உங்களுடைய தேவையில்லாத செலவுகள் சிறிது நேரத்தில் குறைவதை கண்கூடாக பார்க்கலாம். 

இதையும் படிங்க: கருப்பட்டி வச்சு காபி போடாம அதை வைத்து வெயிலை சமாளிக்கும் 4 பானங்கள்..மலையை புரட்டும் அபார சக்தி கிடைக்கும்..!

Latest Videos

click me!