"மனசே சரியில்ல.. வீட்டுல எப்பவும் பிரச்சனை, செலவுக்கு மேல செலவு. தூங்க முடியாத அளவுக்கு மன அழுத்தம், நெனச்ச வேலை நடக்கல கைல காசு இல்ல" என்பது போன்ற புலம்பல்கள் வருவதற்கு முதல் காரணம் அவர்களுக்கு நேரம் சரியில்லை என்பதுதான். என்னதான் முயற்சி செய்தாலும் தோல்வியில் தான் முடியும். நம் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் நிரம்பி, கெட்ட நேரம் தொடங்கிவிட்டால் அந்த நேரத்தில் நம்மை தேடி வரும் நல்ல விஷயங்கள் கூட கெட்டதாகவே மாறிவிடும்.