மணி பர்ஸ் இந்த நிறத்துல பயன்படுத்தினா உங்க பணம் ஒருநாளும் தீர்ந்து போகாது..ஆனா இந்த கலர் எப்பவும் டேஞ்சர் தான்

First Published | Mar 15, 2023, 11:59 AM IST

வாஸ்து சாஸ்திரத்தின்படி, உங்கள் பர்ஸின் நிறம் பணவரவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் பணத்தை அதிகமாக கவர முடியும். 

பணம் இல்லையென்றால் நிம்மதியாக சாகக் கூட முடியாது என கேஜிஎப் படத்தில் ஒரு வசனம் வரும். அது பணக்கஷ்டத்தோடு வாழும் நபர்களுக்கு அனுபவப்பூர்வமாக புரிந்திருக்கும். பணம் உங்களுடைய ஆசை மட்டும் அல்ல; அத்தியாவசிய தேவைகளையும் தான் பூர்த்தி செய்கிறது. பணத்திற்கும் பணத்தை வைக்கும் பை/ பர்ஸுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. எந்த நிறத்தில் பர்ஸ் உபயோகப்படுத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என்பதை குறித்து இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். 

பழுப்பு நிறம் 

பூமியை குறிக்கிறது. இது உங்கள் செல்வத்தில் அதிக நிலைப்புத்தன்மையை கொண்டு வரும். உங்கள் வருமானம், செலவுகளில் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. 

மஞ்சள் நிறம் 

மஞ்சள் என்றால் சூரியனின் நிறம், இது செல்வம் மற்றும் செழிப்பின் சின்னமாக நம்பப்படுகிறது. இது மகிழ்ச்சி, நேர்மறை ஆற்றலுடன் தொடர்புடையது. இது உங்கள் பணப்பைக்கு சிறந்த நிறமாக அமைகிறது. 

Tap to resize

ஆரஞ்சு நிறம்... 

ஆரஞ்சு நிறம் என்றாலே உற்சாகம், வெற்றி, நேர்மறையுடன் தொடர்புடையது. இது செல்வத்தையும் செழிப்பையும் ஈர்க்கும் என்பது ஐதீகம். உங்கள் பர்ஸுக்கு இது ஒரு அதிர்ஷ்ட நிறமாக கருதப்படுகிறது. 

 நீல நிறம்.. 

நீல நிறம் என்றால் அமைதியை குறிக்கும். பணத்தின் நிலைப்புத்தன்மையையும் இந்த நிறம் குறிக்கும். பணம் நிலைப்பதை நீல நிறம் தூண்டுகிறது என்பதால் வாஸ்து சாஸ்திரம் நீல நிற பர்ஸ் வாங்குவதை பரிந்துரைக்கிறது. தொண்டை சக்கரத்துடன் தொடர்புடையது. 

இதையும் படிங்க: வெள்ளி மோதிரம் இந்த விரலில் அணிந்து கொண்டால் போதும்.. உங்களுக்கு புகழும் அதிர்ஷடமும் தேடி வரும்..

பச்சை நிறம்... 

இந்த நிறம் நேர்மறை ஆற்றலையும், செழிப்பான வாழ்க்கை, வளர்ச்சியும் குறிக்கும். பணப்புழக்கத்தை அதிகரித்து வளர்ச்சியை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், பச்சை பர்ஸை தேர்ந்தெடுப்பது சரியானது. பச்சை நிற பர்ஸ் செல்வத்தையும் வெற்றியையும் ஈர்க்கும் என்பது நம்பிக்கை. இதயச் சக்கரத்துடன் தொடர்பு கொண்டது. அன்பு, இரக்கம் ஆகியவற்றை குறிக்கிறது. 

சிவப்பு 

புகழ், செழிப்பு ஆகியவற்றை சிவப்பு நிறம் குறிக்கிறது. பணத்தை ஈர்க்கும் என்றாலும், நெருப்பின் அடையாள நிறம் என்பதால், செலவுகளையும் அதிகரிக்கக்கூடும். எனவே எப்போதாவது பயன்படுத்தலாம். சிவப்பு பர்ஸ் நல்ல அதிர்ஷ்டத்தையும் நிதி விஷயங்களில் வெற்றியையும் தரும் என நம்பப்படுகிறது. 

கருப்பு நிற பர்ஸை உபயோகத்தை வாஸ்து பரிந்துரைப்பதில்லை. இதில் பணக்கஷ்டம் இருக்குமாம். 

இதையும் படிங்க: கண் திருஷ்டியால் நீங்கள் தொடங்கும் காரியங்கள் தடைபடுதா? வீட்டில் ஓயாத பிரச்சனை.. இந்த 1 பரிகாரத்தை பண்ணுங்க

Latest Videos

click me!