'யார் கண்ணு பட்டுச்சோ தெரியல அந்த குடும்பம் இப்படி நொடிஞ்சு போச்சு' என நல்லா வாழ்ந்து கெட்ட குடும்பங்களை பார்த்து மற்றவர்கள் சொல்வதை கேட்டிருப்பீர்கள். கண் திருஷ்டி அவ்வளவு மோசமானது. கல்லடிபட்டாலும் கண்ணடி மட்டும் படவே கூடாது என பெரியோர் சொல்வதை அலட்சியப்படுத்தக் கூடாது. திருஷ்டி என்றால் இல்லாதவர்கள் இருப்பவர்களைக் கண்டு ஏக்கத்துடன் பெருமூச்சு விடுவது, கண்களால் பொறாமை கொள்வது, மனதுக்குள் அதைக் குறித்து ஏங்குவது ஆகும்.
-To protect your home and family members from evil eye, do these astrological remedies
கண் திருஷ்டி தோஷம் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் ரொம்ப சோர்வாகவும், உடல் முழுக்க வலியாலும் அவதிப்படுவர். நன்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சட்டென அழத் தொடங்கி விடும். நன்றாக இருக்கும் குடும்பத்தில் திடீரென பணக்கஷ்டமும், மனவேதனையும் ஆட்டுவிக்கும். இது கண் திருஷ்டி தோஷம் செய்யும் வினைதான்.
கண்திருஷ்டிக்கு பரிகாரம் என்றால் அதில் முதன்மையானது கடலில் சென்று நீராடுவது தான். மாதம் ஒரு முறை கடலில் சென்று குளிப்பது திருஷ்டியில் இருந்து விலக்கி வைக்கும். ஆனால் எல்லோருக்கு கடலுக்கு செல்வது சாத்தியமில்லை. அவர்கள் வீட்டில் குளிக்கும் நீரில் கொஞ்சம் கல் உப்பு போட்டு நீராடலாம். கண் திருஷ்டி தோஷத்தால் வரும் உடல் வலி, சோர்வு எல்லாம் நீங்கும் என்பது ஐதீகம். இதுமட்டுமில்லை இன்னும் சில பரிகாரங்கள் இருக்கின்றன. உங்களுக்கு ஏற்ற பரிகாரத்தை பின்பற்றுங்கள்.
கண் திருஷ்டி பரிகாரங்கள் பல மாதிரியான வகைகளில் இருக்கின்றன. சின்ன குழந்தைகளின் கால் கட்டை விரல் நகத்தின் மீது கருப்பு மை பூசிவிட்டால் எந்த கண் திருஷ்டியாக இருந்தாலும் அவர்களின் கிட்ட நெருங்காது. நம் வீட்டிற்குள் எதிர்மறை சக்திகள் வருவதை தடுக்க, தீய எண்ணம் கொண்ட மனிதர்களின் தாக்கம் வீட்டை பாதிக்காமல் இருக்க, கண் திருஷ்டி தோஷம் விலக வீட்டு வாசலில் பெளர்ணமி அன்று நீர் பூசணி கட்டி தொங்கவிட்டால் போதும்.
வளர்பிறை வெள்ளியில் காலை 9 மணி அளவில் கற்றாழையை கட்டி தொங்கவிடுவது கண் திருஷ்டியை போக்கும். வாசலுக்கு மேல் ஒரு எலுமிச்சையும் 5 பச்சை மிளகாய் ஒன்றன் பின் ஒன்றாக மாத்தி மாத்தி கயிற்றில் கோர்த்து தொங்கவிடலாம். இதை செவ்வாய் கிழமை அன்று தொங்கவிடலாம்.
வீட்டில் உள்ள எல்லோரின் தோஷமும் விலக, தெருமண் எடுத்து கடுகு, உப்பு, 3 மிளகாய் சேர்த்து கிழக்கு திசை பார்த்து உட்காந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றுங்கள். அதனை நன்கு எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடுங்கள். கண் திருஷ்டி நீங்க இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமை தான் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: செவ்வாய் கிழமை நல்ல காரியம் பண்ணக்கூடாது என்பது உண்மையா? இந்த விஷயம் மட்டும் தெரிந்தால் செல்வ செழிப்பு தான்
வியாபாரம் செய்பவர்கள் தினமும் ஒரு எலுமிச்சம் பழத்தினை 2 துண்டாக வெட்டி அதில் கொஞ்சம் குங்குமம் தடவி கடைக்கு வருவோர் கண்பார்வையில் படும் படி வைத்துவிடுங்கள். இரவில் கடை மூடும்போது அதை எடுத்து உங்களுடைய தலையைச் சுற்றி இடம் வலமாக மாற்றி தூக்கி வீசுங்கள். இதை செய்யமுடியாவிட்டால் கடை மூடும் சமயம் 1 எலுமிச்சம் பழத்தில் கற்பூரம் வைத்து கடைக்கும் உங்களுக்கும் சேர்த்து சுத்தி நசுக்கி இட வலமாக மாற்றி தூக்கி வீசுங்கள். இதனால் திருஷ்டி கழியும் என்பார்கள்.
இதையும் படிங்க: சமைக்காமல் இதை அப்படியே சாப்பிட்டால் போதும்.. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள்..!