தரித்திரம் பிடிச்ச இந்த பொருட்களை, வீட்டுல இருந்து உடனே தூக்கி போடுங்க.. மொத்த பீடை ஒழிந்து செல்வம் பெருகும்

First Published | Mar 15, 2023, 3:45 PM IST

வீட்டில் எதிர்மறை ஆற்றலை பரப்பக்கூடிய இந்த பொருள்களை உடனே தூக்கி எறியுங்கள். இல்லையென்றால் வீட்டில் லெட்சுமி கடாட்சம் இருக்காது. 

வரும் மார்ச் 22ஆம் தேதி உகாதி பண்டிகை. இது தெலுங்கு, கன்னட மக்களின் புத்தாண்டு. இந்த நாளை முன்னிட்டு அவர்கள் வீட்டில் சில மாற்றங்களை செய்வர். இதனால் குடும்பத்தில் அமைதி கிடைப்பதோடு எதிர்மறை ஆற்றலும் குறையும். ஏனென்றால் நாம் வீட்டில் வைத்துள்ள சில பொருள்கள் தான் எதிர்மறை ஆற்றலுக்கும் நம் பிரச்சனைகளுக்கும் காரணம். இந்த பதிவில் எந்த பொருள்களை தூக்கி வீசினால் வீட்டில் நல்ல காலம் பிறக்கும், பிரச்சனைகள் ஓய்ந்து விடிவு காலம் அமையும் என்பதை காணலாம். 

உடைந்த சிலைகள் 

வாஸ்து சாஸ்திரத்தின்படி நாம் வீட்டில் வைத்திருக்கும் தெய்வ சிலைகளை உடைக்கக்கூடாது. ஒருவேளை சிலை எங்காவது கொஞ்சம் உடைந்திருந்தால், அதை ஓடும் நீரில் வீசிவிட வேண்டும். இல்லையெனில், அது வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தைத் தரும். கவனமா இருங்க..! 

Latest Videos


ஓடாத கடிகாரம் 

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒரு வீட்டில் ஓடாத கடிகாரம் இருந்தால் அந்த நபரின் அதிர்ஷ்டமும் அப்படியே நகராமல் நின்றுவிடுகிறது. வீட்டில் கடிகாரம் வேலை செய்வதை நிறுத்தினால், உடனடியாக சரிபார்க்க வேண்டும் அல்லது அதை தூக்கி எறிய வேண்டும். இது மாதிரியான நிறுத்தப்பட்ட கடிகாரங்கள் நம் வாழ்வின் நிதி நிலையில் மோசமான விளைவுகளை உண்டாக்குகிறது. உடைந்த கடிகாரங்கள், ஓடாத கைக்கடிகாரங்களை சரிபார்க்க வேண்டும் அல்லது தூக்கி எறிய வேண்டும். 

உடைந்த கண்ணாடி 

வாஸ்து சாஸ்திரத்தின் படி, உடைந்த கண்ணாடி அல்லது அதிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களை வீட்டில் வைத்திருப்பது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது. இது பொருளாதார நிலையை மந்தமாக்கும். கண்ணாடி தொடர்பான உடைந்த பொருட்களை வீட்டில் வைக்காதீங்க ப்ளீஸ். 

ஆக்ரோஷமான சிலை 

வாஸ்து சாஸ்திரத்தின்படி, உக்ரமாக உள்ள உள்ள தெய்வத்தின் சிலையை பூஜை அறையில் வைக்கக் கூடாது. ஏனெனில் அவை தீமைக்குக் காரணமாகக் கருதப்படுகின்றன. உதாரணமாக, உக்கிரமான நரசிம்மர், சனி, கொலு வடிவில் துர்க்கை போன்றவை வீட்டில் வைக்கக் கூடாதவை. 

இதையும் படிங்க: மணி பர்ஸ் இந்த நிறத்துல பயன்படுத்தினா உங்க பணம் ஒருநாளும் தீர்ந்து போகாது..ஆனா இந்த கலர் எப்பவும் டேஞ்சர் தான்

கிழிந்த மத புத்தகங்கள்  

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கிழிந்த மத புத்தகங்களை வீட்டில் வைக்கவே கூடாதாம். ஒருவேளை அவை கிழிந்தால், அதை ஓடும் நீரில் போடவும். 

வீட்டில் உள்ள பழைய குங்குமம், மஞ்சள், பிரசாதமாக பெற்ற குங்குமம், மஞ்சள் ஆகியவை எப்போதும் புனிதமானவை. ஆனாலும் கிரகணம் முடிந்தவுடன், அந்த பிரசாதம் விடுவிக்கப்பட வேண்டும். அத்தகைய பிரசாதத்தை ஓடும் நீரில் போட்டுவிடுங்கள். 

இந்த பொருள்களை அப்புறப்படுத்துவதன் மூலம் நேர்மறை ஆற்றலை ஈர்க்க முடியும். முயன்று பாருங்கள். 

இதையும் படிங்க: சமையல் எண்ணெய் கொழுப்பு ஏத்திடும்னு சொல்வாங்க.. இந்த எண்ணெய் தினம் 1 ஸ்பூன்.. புற்றுநோய் வந்தா கூட சமாளிக்கும்

click me!