சனி பலன்கள்.. இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் வந்தாச்சு.. இனி வர்ற அதிர்ஷ்டத்தால் வாழ்க்கையே மாறப் போகுது..!

First Published | Mar 16, 2023, 4:11 PM IST

சனி பகவான் தனது ராசியில் பலம் வாய்ந்தவராக சஞ்சரிக்க உள்ளார். அதன் பலன்களை அனுபவிக்க போகும் ராசிக்காரர்களை இங்கு காணலாம். 

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்கள் தங்கள் ராசிகளை மாற்றுவது, ஒவ்வொரு ராசிக்கும் நல்ல தாக்கம் அல்லது பலவீனமான பலன்களை தரும். அதாவது கிரகங்கள் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தையும் சில ராசிக்காரர்கள் எதிர்மறை விளைவுகளையும் சந்திக்கின்றனர். 

இப்படியாக வரும் மார்ச் 18ஆம் தேதியில் சனி பகவான் தன் ராசியில் பலம் வாய்ந்தவராக சஞ்சரிக்கப் போகிறார். இதன் தாக்கம் எல்லா ராசிகளிலும் இருந்தாலும், நல்ல பலன்களை பெறும் 4 ராசிகள் பற்றி இங்கு காணலாம். இவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றமும், கைநிறைய ஆதாயமும் கிடைக்க வாய்ப்புள்ளது.

Tap to resize

ரிஷப ராசி அன்பர்களே...

இந்த ராசிக்காரர்களுக்கு சனி தேவன் பலம் வாய்ந்தவராக இருப்பதால், பொருளாதார ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் ஜாதகத்தில் சனி பகவான் ஷஷா, கேந்திர திரிகோண ராஜயோகத்தை ஏற்படுத்துகிறார். ஆகவே உங்களுடைய தகப்பனாரின் உடல்நலம் மேம்படும். வாழ்வாதாரம் செழிப்பாக மாறும். இந்த காலத்தில் உங்களுடைய மரியாதை, கௌரவம் நிலை பெறலாம். பணியிடங்களில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் நல்ல லாபம் வரும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். அரசாங்கத்தால் பலன் பெறுவீர்கள். 

 துலாம் ராசி அன்பர்களே... 

இவர்களுக்கு சனி பகவான் நல்ல பலன் கொடுப்பார். இவர்களுடைய ஜாதகத்தில் சனி பகவான் கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்குவதால் நல்ல நேரம் தொடங்கிவிடும். தொழில் செய்பவர்கள், சிந்தனையாளர்கள், மருத்துவர்கள், ஆன்மீகவாதிகள், கண்டுப்பிடிப்பாளர்கள், ஆராய்ச்சி செய்பவர்கள் எல்லோருக்கும் நேரம் நன்றாக இருக்கும். பங்குச் சந்தை, பந்தயம், லாட்டரி ஆகியவற்றில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு சாதகமான நேரம். காதல் கைகூடும். குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்களுக்கு சாதகமான நேரமாக இருக்கும்.

மகர ராசி அன்பர்களே... 

மகர ராசி அன்பர்களுக்கு அதிபதியாக சனி பகவான் அமர்ந்திருப்பதால், இந்த ராசியினருக்கு சனியின் பலன்கள் சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியாக வலுப்பெறவீர்கள். மன அழுத்தம் குறைந்து, தன்னம்பிக்கை அதிகமாகி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்களுடைய கடின உழைப்பின் பலனை இப்போது பெற்று கொள்வீர்கள். முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இரும்பு, எண்ணெய், பெட்ரோல் சார்ந்த பொருட்கள் வியாபாரம் நடத்துபவர்களுக்கு லாபம் கிடைக்கும். அடுத்த மூன்று மாதங்கள் சூப்பரான நன்மைகள் கிடைக்கும். பணியிடங்களில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு பெறுவீர்கள். 

இதையும் படிங்க: தேனியில் ஆச்சர்யம்.. 5 தலை நாகம் பாதுகாக்கும் சிவன் கோயில்.. இங்க எவ்வளவு விசேஷம் தெரியுமா?

கும்ப ராசி அன்பர்களே... 

இந்த ராசியினருக்கு சனி பலமாக இருப்பதால் நன்மைகள் பெறுவீர்கள். உங்களுடைய ஜாதகத்தில் சனி தேவன் ஷஷா மஹாபுருஷ ராஜயோகம் உண்டாக்கியுள்ளார். எதிர்பாராத வகையில் மரியாதை கிடைக்கும். திருமண வாழ்க்கையில் கொஞ்சம் பிரச்சனை ஏற்படலாம். கமிஷன் ஏஜென்ட், கன்சல்டன்சி பிரிவில் உள்ளவர்கள் லாபம் அடைவார்கள். வணிகம் சனியுடன் தொடர்பு கொண்டுள்ளதால் பயன் பெறுவீர்கள். திருமணமாகாத நபர்களுக்கு திருமணம் கைகூடும் வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: கையில காசு நிக்காம வரவுக்கு மிஞ்சிய செலவு வருதா? வீட்டுல இந்த விஷயத்தை கவனிங்க.. பணம் தங்க 3 வாஸ்து டிப்ஸ்!

Latest Videos

click me!