ராகு என்றாலே ஒரு பயம் வரும். ராகுவின் குணமும் இதுதான். ஜோதிடத்தில், ராகு மிகவும் கணிக்க முடியாத பலன் தரும் கிரகமாக விவரிக்கப்படுகிறது. இந்த கிரகத்தை புரிந்துகொள்வது மிகவும் கடினம். ராகு பூமியின் சுற்றுப்பாதையும் சந்திரனின் சுற்றுப்பாதையும் வெட்டும் இடத்தில் அடையாளம் காணப்படுகிறது.
ஜாதகத்தில் ராகுவின் நிலை மோசமாக இருந்தால், அந்த நபர் பிரச்சனைகளால் சூழப்படுவார். ஆனால் ஜாதகத்தில் ராகு சரியான நிலையில் இருந்தால், எதிர்பார்த்ததை விட பல மடங்கு நல்ல பலன்களைத் தரும். இது ஒரே இரவில் அதிர்ஷ்டத்தை மாற்றும் கிரகமுன் கூட. இப்போது ராகு பெயர்ச்சியாகி மேஷ ராசியில் இருக்கிறார் அக்டோபர் 30 வரை அங்கேயே இருப்பார். அன்று அவர் வியாழனின் ராசியான மீனத்தில் நுழைகிறார். இதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகளை பார்க்கலாம்.