வீட்டுல மயிலிறகு வைப்பதால் எத்தனை துன்பங்கள் நீங்கும் தெரியுமா?

First Published | Jun 5, 2023, 5:49 PM IST

வாழ்க்கையில் முன்னேற்றம் காண எடுத்த காரியங்களில் வெற்றி பெற மயிலிறகை வைத்து எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம். 

இந்து மதத்தில் மயிலிறகு புனிதமானதாக கருதப்படுகிறது. அதனுடைய முக்கியத்துவம் கிருஷ்ணரின் கிரீடத்தை அலங்கரிப்பது மட்டுமல்ல; அதிர்ஷ்டத்திற்கும் மயிலிறகு மங்களகரமானதாக கருதப்படுகிறது. மயிலிறகு ஜோதிடத்திலும் பயன்படுத்தப்படுகிறது. ஒன்பது கிரகங்களின் இருப்பிடமாகவும் இது நம்பப்படுகிறது. 

ஜோதிட சாஸ்திரப்படி, வீட்டில் மயிலிறகுகள் இருந்தால், உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் இருக்கும் என்பது ஐதீகம். வீட்டின் வாஸ்து தோஷங்களும் மயிலிறகுகளால் நீங்கிவிடும். வாஸ்து தோஷங்களை அறவே நீக்கும் மயிலிறகு குறித்து இங்கு காணலாம். 

வாஸ்து சாஸ்திரத்தின் படி, திடீரென்று உங்கள் வாழ்க்கையில் பணப் பிரச்சனைகள் வரத் தொடங்கி, உங்கள் வேலையில் நஷ்டங்களையும், தடைகளையும் சந்திக்க நேரிட்டால், உங்கள் படுக்கையறையில் மயிலிறகுகளை வைக்கலாம். இதன் பலனாக உங்கள் வேலை விரைந்து முடிய ஆரம்பிக்கும்.

Tap to resize

ஜோதிடத்தின் படி, திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் இருந்தால், மயிலிறகுகளை வைத்து பிரச்சனைகளை நீக்கலாம். இதற்காக படுக்கையறையின் சுவரில் இரண்டு மயிலிறகுகளை ஒன்றாக வைக்க வேண்டும். இதன் விளைவாக கணவன்-மனைவி இடையே உள்ள இடைவெளி குறையத் தொடங்குகிறது. இல்லறம் மேம்படும். 

ஜோதிட சாஸ்திரப்படி, வீட்டில் உள்ள பூஜையறையில் மயிலிறகை வைத்து தினமும் பூஜை செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், தடைபட்ட வேலைகள் முடிந்து, பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். 

இதையும் படிங்க: வீட்டு தலைவாசலில் சங்கு பதித்தால் இத்தனை சிறப்பு பலன்களை பெறலாமா? இது தெரியாம வீடு கட்டாதீங்க!!

உங்கள் வீட்டில் ஏதேனும் வாஸ்து தோஷம் இருந்தால், உங்கள் வீட்டின் பூஜையறையில் 5 மயிலிறகுகளை வைக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி மகிழ்ச்சியும் அமைதியும் வர ஆரம்பிக்கும்.

ஜோதிட சாஸ்திரப்படி, உங்களுடைய குழந்தை பிடிவாத குணம் கொண்டவராக இருந்தால், மயிலிறகு வைத்து செய்த விசிறியைக் கொண்டு காற்று வீசுங்கள். இந்த பரிகாரத்தைச் செய்வதன் மூலம், உங்கள் குழந்தைகளின் இயல்பு அமைதியாகத் தொடங்குகிறது. 

இதையும் படிங்க: கணவன் மனைவி உறவுகளில் இருக்கும் பிரச்சனையை முடித்து வைக்கும் ஒரு கோயில்... எங்க இருக்கு தெரியுமா..?

Latest Videos

click me!