இந்த சின்ன பூஜை பண்ணிங்கன்னா தொழில், வியாபாரம் பல மடங்கு பெருகி பணக்காரன் ஆகிடுவீங்க!!

First Published | Jun 5, 2023, 6:34 PM IST

உங்களுடைய தொழிலும் வியாபாரமும் பெருகி பணக்காரர் ஆக இந்த எளிய பூஜையை செய்தால் போதும். இறைவனின் சக்திக்கு நிறைய வல்லமை உண்டு. வாங்க அந்த பூஜையை தெரிந்து கொள்ளலாம். 

தொழிலில் முன்னேற்றம் ஏதுமே இல்லாமல் சுணக்கமும் நஷ்டமும் இருந்தால் மனம் அமைதியின்றி அலையும். தொழில், வியாபாரம் செழித்தால் தான் குடும்பத்திலும் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும். வாழ்வில் முன்னேற தொழில் சிறக்க எளிய பரிகாரங்களை செய்தால் வெற்றியும் லாபமும் வந்து கொண்டே இருக்கும். 

நம்முடைய தொழிலில் வளமாக இருந்தால் வாழ்க்கை தரம் பல மடங்கு உயரும். வியாபாரம் வளர, செல்வம் பெருக, சிறு நிறுவனம் பெருநிறுவனமாக உருவெடுக்க சின்ன பரிகாரம் செய்தால் போதும். நாம் செய்யும் தொழில் செழிப்பாக நடக்க வேண்டுமெனில் அதற்கு தொழில் செய்கிற இடத்தில் நேர்மறை ஆற்றல்கள் பரவி இருக்க வேண்டும். நேர்மறை சக்திகள் இருக்கும் இடத்தில் மட்டுமே வளர்ச்சி, மகிழ்ச்சியும் தான் இருக்கும். மகாலட்சுமி உங்களிடையே வாசம் செய்வாள். இதற்காக செய்ய வேண்டிய பரிகாரத்தை இங்கு காணலாம். 

Tap to resize

Vastu Tips For Money- Money kept in the right direction can make you rich, this is the easy way to become a millionaire!

தொழில் விருத்தி பரிகாரம்: 

சொந்த தொழில் செய்வோர் அதில் விருத்தி அடைய சனி பகவானை வழிபாடு செய்ய வேண்டும். இதற்கு சனிக்கிழமை அன்று ராகு கால நேரத்தில் தொழில் செய்யும் இடத்திற்கு பக்கமாக அமைந்துள்ள கோயிலிலோ அல்லது வெளி இடத்திலோ எங்கு வன்னி மரம் இருக்கிறதோ அங்கு சென்று மரத்திற்கு தண்ணீர் ஊற்றுங்கள். அந்த மரத்திற்கு மஞ்சள், குங்குமம் இட்டு, 6 அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வையுங்கள். பின்னர் இடமிருந்து வலமாக 6 முறை வலம் வந்து சனி பகவானை மனதார நினைத்து வழிபட வேண்டும். 

இதையும் படிங்க: வீட்டு தலைவாசலில் சங்கு பதித்தால் இத்தனை சிறப்பு பலன்களை பெறலாமா? இது தெரியாம வீடு கட்டாதீங்க!!

பின்னர் உங்களுடைய வேண்டுதல்களை ஒரு வெள்ளை காகிதத்தில் எழுதி, அந்த மரத்தில் கட்டிவையுங்கள். இந்த வழிபாட்டை மனம் தளராமல் ஒவ்வொரு சனிக்கிழமையும் தொடர்ந்து செய்து வந்தால் உங்களுடைய தொழில் வளர்ச்சி உறுதியாக இருக்கும். சனி பகவானின் அம்சம் வன்னி மரம். இது வெற்றியை தரும் என்பது ஐதீகம். இந்த மரத்தை வழிபாடு செய்வதால் தேர்வு, வழக்கு, வாழ்க்கை எல்லாவற்றிலும் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். தொடர்ச்சியாக வன்னி மரத்தை வழிபாடு செய்தால் வெற்றிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்பது மிகையல்ல. 

இதையும் படிங்க: வீட்டுல மயிலிறகு வைப்பதால் எத்தனை துன்பங்கள் நீங்கும் தெரியுமா?

Latest Videos

click me!